17 ஆம் திகதி ஆரம்பமாகும் சாதாரண தரப்பரீட்சை! பரீட்சார்த்திகளுக்கு முக்கிய அறிவுறுத்தல்
சாதாரண தரப் பரீட்சை காலத்தில் ஓரளவு மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதால், ஆபத்தில் உள்ள பாடசாலைகள் குறித்த தகவல்கள் அந்த பகுதிகளில் உள்ள கல்வி அலுவலகங்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO) தெரிவித்துள்ளது.
மோசமான வானிலை காலத்தில் வழங்கப்படும் அறிவுறுத்தல்களின்படி பாடசாலைகள் செயல்பட வேண்டும் என்று அமைப்பின் மூத்த புவியியலாளர் வசந்த சேனாதீர தெரிவித்துள்ளார்.
மாணவர்களுக்கு வானிலை முன்னறிவிப்பு
அதன்படி, மக்கள் வீதிகளைப் பயன்படுத்தும் போது, பாடசாலைகளின் இடங்கள் மற்றும் மக்கள் கூடும் இடங்கள் குறித்து வழங்கப்படும் அறிவுறுத்தல்களைப் பின்பற்றி அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யுமாறு அவர் கேட்டுக்கொண்டார்.

இந்த ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தரப் பரீட்சை பெப்ரவரி 17 முதல் பெப்ரவரி 26 திகதி வரை நடைபெற உள்ளது.
நாளை (15) முதல் தென்கிழக்கு வங்காள விரிகுடா கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதனால், எதிர்கால முன்னறிவிப்புகள் மற்றும் இது தொடர்பாக வெளியிடப்படும் அறிவிப்புகள் குறித்து பொதுமக்கள் கவனம் செலுத்துமாறு திணைக்களம் கேட்டுக்கொள்கிறது.
Jason Sanjay: தோல்வியில் முடிந்த காதல்.. போலிசில் மாட்டிய சஞ்சய்! தளபதி மகனின் தெரியாத மறுபக்கம் Manithan
T20 போட்டியில் 188 ஓட்டங்கள் விளாசிய பிரிட்டோரியஸ்; கெயிலின் 13 வருட சாதனை முறியடிப்பு News Lankasri