கடுமையான மின்னல் எச்சரிக்கை! பொதுமக்கள் அவதானத்துடன் இருக்குமாறு அறிவுறுத்தல்
நாட்டின் சில மாவட்டங்களுக்கு கடுமையான மின்னல் எச்சரிக்கையை வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ளது .
மேற்கு,சபரகமுவ, தெற்கு மாகாணங்கள் மற்றும் பதுளை, நுவரெலியா மாவட்டங்களில் வளிமண்டலவியல் திணைக்களத்தினால் கடுமையான மின்னலுக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் அவதானத்துடன் இருக்குமாறு அறிவுறுத்தல்
இன்று (14) காலை 11.30 மணிக்கு வெளியிடப்பட்ட இந்த எச்சரிக்கை இரவு 11.30 மணி வரை நடைமுறையில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, மேற்கு, சபரகமுவ, தெற்கு மாகாணங்கள் மற்றும் பதுளை, நுவரெலியா மாவட்டங்களில் சில இடங்களில் கடுமையான மின்னல், இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது.
மழை பெய்யும்போது தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும் என திணைக்களம் தெரிவித்துள்ளது. எனவே, பொதுமக்கள் அவதானத்துடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.