மீண்டும் களத்தில் ரணில்! அடுத்த ஜனாதிபதி வேட்பாளராம்..
எதிர்வரும் 2029ஆம் ஆண்டு இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க போட்டியிடலாம் என்று ஐக்கியத் தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் நவீன் திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
சிங்கள ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
அடுத்த ஜனாதிபதித் தேர்தலுக்கு இன்னும் முழுமையாக 3 வருடங்கள் இருக்கின்றன. எனவே அது தொடர்பான தீர்மானங்கள் எதுவும் இதுவரை எடுக்கப்படவில்லை.
சஜித்தா.. ரணிலா..!!
அதற்கு முன்னர் மாகாண சபைத் தேர்தலுக்கு நாங்கள் முகம்கொடுக்க வேண்டும். நான் நினைக்கின்றேன் மிக விரைவில் மாகாண சபைத் தேர்தல் நடைபெறலாம் என்று.
எனவே அந்த தேர்தலுக்கு நாங்கள் தயாராக வேண்டும். 2029ஆம் ஆண்டு இடம்பெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னதாக, ஐக்கியத் தேசியக் கட்சியும், ஐக்கிய மக்கள் சக்தியும் ஒன்றிணைய வேண்டும் என்பது எனது எதிர்பார்ப்பு.

ஒன்றாக இணைந்து ஜனாதிபதி தேர்தலுக்கு முகம்கொடுக்க வேண்டும். அதற்கு பிறகே ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பதை தீர்மானிக்க முடியும்.
தற்போதைய நிலவரத்தின்படி, ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவும், ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாசவும் முன்னிலையில் இருக்கின்றனர். எனவே, இவர்களுள் இருவர் ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்தப்படலாம் என குறிப்பிட்டுள்ளார்.
you may like this video