இலங்கையர் நாம் இல்லற வாழ்க்கையில் இன்பம் காண மகத்தான மாதங்கள்!
உலகளாவிய ரீதியில் கொடிய நோயின் கொடூரத் தாக்கங்கள் மக்களை கோராத்தாண்டவம் ஆடிக்கொண்டிருக்கும் இவ்வேளையில், எம்மக்கள் அதற்கும் அப்பால் பொருளாதாரம், கல்வி, பசி, பட்டினி என வாடுவோர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளமை எல்லோரும் அறிந்ததே.
கடந்த 30 வருட காலமாக யுத்தத்தால் பாதிக்கப்பட்ட எம் சமூக உறவுகள், உடைமைகளை இழந்து பல்வேறு தேசங்களுக்கு புலம்பெயர்ந்தாலும் இன்னல்களை எதிர்கொண்டு வாழ்ந்துகொண்டிருக்கும் மக்களில் ஒருசிலர் தன் விடா முயற்சியாலும் கடின உழைப்பாலும் தமது அன்றாட வாழ்க்கையை செலுத்துவது மட்டுமல்லாது தனக்கென ஒரு வாழ்க்கை, தனக்கென ஒரு வீடு, குடும்பம் பிள்ளைகள் என அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்து வருகின்றனர்.
ஒருசில வேளைகளில் மூட நம்பிக்கை என்று நினைத்தாலும் வாஸ்து, நாள் நட்சத்திரம், ராசி என்பவற்றிலும் எமக்கு குற்றம் குறைகள் வந்து விட கூடாது என்று நினைக்க வேண்டிய கால கட்டம் இது.
அதனால் எந்த காரியத்தை நாம் எடுத்தாலும் எல்லாவழிகளிலும் சிறந்த ஆலோசனை, விடா முயற்சி, பெரியோர்கள் மற்றும் தெய்வ ஆசியுடன் வேலைகளை முன்னோக்கி செல்வது சாலச்.சிறந்ததாகும்.
அவ்வாறெனில் நாம் வாழும் இடத்தில் சந்தோஷமாக மகிழ்ச்சியாக நிம்மதியாக இருக்க நிச்சயம் வீடு குடி புகும் நாளும், கிரக பிரவேசம் செய்யும் நாளும் சிறப்பாக இருக்க வேண்டும்.
தமிழ் மற்றும் ஆங்கில மாதங்கள் வேறுபடும். கலண்டரில் (Calendar) மாதங்களை பார்க்கும் போது தமிழ் மாதங்களை பார்த்து சரியான மாதத்தினை தெரிந்து கொள்ளுங்கள்.
வீடு குடி போக உகந்த மாதங்கள்
வருடத்தில் கீழே குறிப்பிட்டுள்ள ஆறு மாதங்களில் வீட்டுக்கு குடிபுக முடியும். அல்லது கிரக பிரவேசம் செய்யலாம்.
தை, சித்திரை, வைகாசி, ஆவணி, ஐப்பசி, கார்த்திகை
வாடகை வீடு குடி போக உகந்த மாதம்
தை, சித்திரை, வைகாசி, ஆவணி, ஐப்பசி, கார்த்திகை, பங்குனி
பங்குனி மாதம் புது வீடு கிரக பிரவேசம் செய்வது தான் கூடாது. ஆனால் பங்குனி மாதம் வாடகை வீடு குடி போகலாம்.
வீடு குடி போகக் கூடாத மாதங்கள்
இந்த ஆறு மாதங்களில் வீடு குடிபுகுதல் அல்லது கிரக பிரவேசம் செய்வது நல்லதல்ல. இந்த மாதங்களில் கிரகப் பிரவேசம் அல்லது வீடு குடிபுகுதல் கூடாது என்று நம் முன்னோர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.
மாசி, பங்குனி, ஆனி, ஆடி, புரட்டாதி, மார்கழி