ஊடகங்களுக்கு அனுமதி மறுத்த பிரதேச செயலகம்: பொதுமக்கள் விசனம் (Video)
யாழ்ப்பாணம் - சாங்கானை பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற டெங்கு விழிப்புணர்வு தொடர்பான கூட்டத்தில் செய்தி சேகரித்து அறிக்கையிடுவதற்கு ஊடகங்களுக்கான அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாண மாவட்டத்தில் டெங்கு தாக்கத்தினால் மூன்று மரணங்கள் நிகழ்ந்துள்ளதுடன் 4269 பேர் டெங்கு தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
2505 டெங்கு நோயாளர்களுக்கு சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது என வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பதில் பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி நேற்று முன் தினம்(02) தெரிவித்துள்ளார்.
அனுமதி மறுப்பு
இந்நிலையில் டெங்கு தொடர்பான விழிப்புணர்வு நடவடிக்கைகளை உரிய அதிகாரிகள் ஊடகங்களுடன் இணைந்து செய்து வருகின்றனர்.
இவ்வாறான நிலையில் நேற்றைய தினம்(03.01.2024) சாங்கானை பிரதேச செயலகத்தில் டெங்கு விழிப்புணர்வு தொடர்பான மிகப்பெரிய கூட்டம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டு நடைபெற்றுள்ளது.
இருந்தபோதும் சங்கானை பிரதேச செயலர் கவிதா உதயகுமார் அவர்கள் குறித்த கூட்டம் தொடர்பாக செய்தி சேகரித்து அறிக்கையிடுவதற்கு ஊடகங்களுக்கான அனுமதியை மறுத்துள்ளார்.
பொதுவாக இவ்வாறான கூட்டங்களுக்கு ஊடகங்களுக்கு அனுமதி மறுக்கப்படுவதில்லை. ஏனென்றால் ஊடகங்களே இவ்வாறான விடயங்கள் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதில் முக்கிய பங்காற்றுகிறது.
டெங்கு தாக்கம்
பிரதேச செயலரின் இவ்வாறான செயற்பாடு குறித்த மக்கள் கருத்து தெரிவிக்கையில்,
”டெங்கு தாக்கம் அதிகமுள்ள பகுதிகளை ஊடகங்கள் வெளிப்படுத்தினால் அந்த இடங்களில் டெங்கு கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை செய்ய வேண்டும். ஆகையால் குறித்த விடயங்களை மூடிமறைக்க பிரதேச செயலர் முனைகின்றாரா?” என மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
இந்த கூட்டத்தில் சாங்கானை பிரதேச செயலகம், வலி.மேற்கு பிரதேச சபை, சங்கானை பொது சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தினர் மற்றும் சமூகமட்ட பொது அமைப்பினர் என பலரும் கலந்துகொண்டனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் அதிக சம்பளம் வாங்கும் நடிகை யார் தெரியுமா.. இதோ பாருங்க Cineulagam

8 மடங்கு வேகமாக தாக்கும் ஹைப்பர்சோனிக் ஏவுகணை.., இந்தியாவால் பாகிஸ்தான், சீனாவுக்கு சிக்கல் News Lankasri

படுக்கையில் நெப்போலியன் மகன்... எலும்பும் தோலுமாக மாறியதற்கு என்ன காரணம்? நேரில் சந்தித்த பிரபலம் Manithan
