கேள்விக்குரிய 323 கொள்கலன்கள்! பத்மேவின் போதைப்பொருள் கடத்தல் தொடர்பில் வெளியாகிய செய்தி
மித்தெனியவில் புதைத்துவைக்கப்பட்ட ஐஸ் போதைபொருள் உற்பத்தி தொழிற்சாலைக்காக கொண்டு வந்த கொள்கலன்கள் தொடர்பில் தீவிர விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதான பொலிஸார் கூறியுள்ளனர்.
பொதுஜன பெரமுனவின் (SLPP) முன்னாள் உறுப்பினர் ஒருவரால், பாதாள உலகக் கும்பல் தலைவர் கெஹல்பத்தர பத்மேவின் போதைப்பொருள் உற்பத்தி தொழிற்சாலைக்காக கொண்டு வந்த இரசாயனப் பொருட்களே இவ்வாறு புதைக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் முன்னதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்த கேள்விக்குரிய இறக்குமதி செய்யப்பட்ட 323 கொள்கலன்களுக்கும், மித்தெனியவில் கண்டுபிடிக்கப்பட்ட ஐஸ் போதைப்பொருள் சம்பவத்தில் தொடர்புடைய இரண்டு கொள்கலன்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை என பொலிஸார் கூறியுள்ளனர்.
கெஹெல்பத்தர பத்மே
அவை கெஹெல்பத்தர பத்மேவால் நாட்டிற்கு கொண்டு வரப்பட்டன என்று பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
மேலும், பொலிஸ் ஊடகப்பிரிவு வெளியிட்ட தகவலின்படி,
"2025 ஆம் ஆண்டில் 323 கொள்கலன்களை விடுவிப்பது குறித்து சமூகத்தில் சில ஊகங்கள் இருந்தன. ஆனால் இந்த இரண்டு கொள்கலன்களும் அதனுடன் தொடர்புடையவை அல்ல.
ஏனென்றால் நாங்கள் அந்தக் கொள்கலன்களின் எண்களைச் சரிபார்த்தோம். காரணம், குற்றப் புலனாய்வுத் துறை 323 கொள்கலன்கள் தொடர்பாக சிறப்பு விசாரணை நடத்தியது.
மேலும், தொடர்புடைய தொகுதி எண்கள் தொடர்பில் பரிசோதிக்கப்பட்டதில் இதன் உண்மைத்தன்மை வெளிப்படுத்தப்பட்டது.
எனவே, இந்த இரண்டு கொள்கலன்களுக்கும் 323கொள்கலன்கள் விவகாரத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை” என கூறப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
தொண்டைமானாறு செல்வச்சந்நிதி ஆலயம் தீர்த்தத் திருவிழா



