தப்பிச்சென்ற கைதிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவித்தல்
நாட்டில் கடந்த 9 ஆம் திகதி இடம்பெற்ற வன்முறை சம்பவத்தின்போது தப்பிச்சென்ற சிறைக்கைதிகளை உடனடியாக சரணடையுமாறு சிறைச்சாலைகள் திணைக்களம் அறிவித்தல் விடுத்துள்ளது.
வட்டரெக்க சிறைச்சாலையிலிருந்து 26 கைதிகள் காணாமற்போயுள்ள நிலையில் , தப்பியோடிய கைதிகள் சிறைச்சாலையிலோ அல்லது அருகிலுள்ள பொலிஸ் நிலையத்திலோ சரணடைவதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாக திணைக்களத்தின் ஊடகப்பேச்சாளர் சந்தன ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார்.

இதற்கமைய, கைதிகள் 0114 677 177 அல்லது 0114 677 517 என்ற தொலைபேசி இலக்கங்களுக்கு அழைப்பினை மேற்கொண்டு சரணடையலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் இடம்பெற்ற வன்முறை சம்பவத்தின்போது கைதிகளுக்கான புனர்வாழ்வு வேலைத்திட்டத்தின் ஒரு அங்கமாக இடம்பெறும் வெளிப்புற கட்டட நிர்மாண வேலைகளுக்காக அழைத்துச் செல்லப்பட்ட 181 கைதிகள், மீண்டும் வட்டரெக்க சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லப்பட்ட வேளையில் கும்பலொன்றினால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டிருந்தது.

இதன்போது, 58 சிறைக்கைதிகள் அதிகாரிகளின் காவலில் இருந்து தப்பிச் சென்றதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
இதனையடுத்து இலங்கை சிறையில் இருந்து தப்பிய 50க்கும் மேற்பட்ட கைதிகள்
கடல்வழியாக தமிழகத்திற்குள் ஊடுருவ வாய்ப்பு உள்ளதாக மத்திய உளவுத்துறை
எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதன் காரணமாக தனுஷ்கோடி உள்ளிட்ட கடலோர பகுதிகளில் தீவிர ரோந்து பணியில் கடலோர காவல் குழும பொலிஸார் மற்றும் இந்திய கடலோர காவல்படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தில் ஏற்பட்ட பிரிவு.. கடும் கோபத்தில் பாண்டியன்.. பரபரப்பான கட்டத்தில் சீரியல் Cineulagam
Bigg Boss: உங்க வீட்டுல இப்படியா வளர்த்திருப்பான் உன்னையெல்லாம்? தரையில் அமர்ந்து வெடித்த விஜய் சேதுபதி Manithan
லண்டனில் சுற்றுலாப்பயணிகளின் கடவுச்சீட்டுகளைப் பரிசோதிக்கும் சீன பாதுகாப்பு அதிகாரிகள் News Lankasri
டிசம்பரில் ஜாக்போட்.. 18 மாதங்களுக்கு பின் அதிர்ஷ்டத்தை கொட்டிக் கொடுக்கும் செவ்வாய் பெயர்ச்சி Manithan