யாழில் இடம்பெற்ற சுற்றுலா துறைசார்ந்த முக்கிய கலந்துரையாடல்
சுற்றுலாத் துறை பிரதி அமைச்சர் ருவன் ரணசிங்கவின் பங்கேற்புடன் யாழில் சுற்றுலா துறைசார்ந்த முக்கிய கலந்துரையாடல் இன்று(04.08.2026) இடம்பெற்றது.
யாழில் உள்ள தனியார் விருந்தினர் விடுதியில் இடம்பெற்ற கலந்துரையாடலில் நாடாளுமன்ற உறுப்பினர்களான கருணநாதன் இளங்குமரன், றஜீவன் ஜெயச்சந்திரமூர்த்தி ஆகியோரும் வடக்கு மாகாண சுற்றுலா அபிவிருத்தி பணியக தலைவர் ஜெ.விவேகானந்தன் உள்ளிட்ட சுற்றுலா துறைசார்ந்த அதிகாரிகள், சுற்றுலா பொலிஸார், முதலீட்டாளர்கள், சுற்றுலா வழிகாட்டிகள் என பலரும் கலந்துகொண்டனர்.
சுற்றுலா பகுதிகளுக்கு விஜயம்
இதன்போது சுற்றுலா துறைசார்ந்த நிலவும் பிரச்சினைகள், சவால்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டு அது பற்றி எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பிலும் ஆராயப்பட்டது.

காரைநகர் கசூரீனா கடற்கரை, நெடுந்தீவு உள்ளிட்ட சுற்றுலா பகுதிகளுக்கு விஜயம் செய்த பிரதி அமைச்சர் அங்குள்ள குறை நிறைகளை கேட்டறிந்து கொண்டதுடன் எதிர்காலத்தில் செய்ய வேண்டிய விடயங்களையும் ஆராய்ந்தார்.

உதயநிதி ஸ்டாலின் கைதினால் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பு - களமிறங்கிய அதிரடிப்படையினர் - முதல்வர் பிறப்பித்த உத்தரவு