இலங்கை மத்திய வங்கி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
கடந்த ஜனவரி மாதத்தில் வெளிநாட்டு பணியாளர்களினால், 487.6 மில்லியன் அமெரிக்க டொலர் நாட்டுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.
இலங்கை மத்திய வங்கி அறிக்கையொன்றினை வெளியிட்டு இதனை தெரிவித்துள்ளது.
அதன்படி, கடந்த வருடத்துடன் ஒப்பிடும் போது, 11.4 சதவீத அதிகரிப்பு எனவும் தெரிவித்துள்ளது.
அந்நிய செலாவணி
இந்த நிலையில் கடந்த வருடம் ஜனவரி மாதம் 437.5 மில்லியன் அமெரிக்க டொலர் வெளிநாட்டு பணியாளர்களினால் அனுப்பப்பட்டுள்ளது.
இதேவேளை, கடந்த ஜனவரி மாதத்தில், சுற்றுலாவினால் கிடைக்கப்பெற்ற வருமானம், 122 சதவீதமாக அதிகரித்துள்ளது.
அதற்கமைய, 341.8 மில்லியன் அமெரிக்க டொலர் அந்நிய செலாவணியாக பெறப்பட்டுள்ளது.
கடந்த வருடம் சுற்றுலா துறையின் ஊடாக 153.5 மில்லியன் அமெரிக்க டொலர் கிடைக்கப்பெற்றுள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |