கிழக்கு மாகாணத்தில் சூறாவளி தாக்குதல் தொடர்பில் வெளியான தகவல்: பொதுமக்களுக்கு முக்கிய அறிவுறுத்தல்
சூறாவளி உருவாகி இன்று இரவு 2.00 மணிக்கு கிழக்கு மாகாணம் மற்றும் கல்முனையை தாக்கும் என்று பரப்பப்படும் வதந்திகளை நம்பவேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு (Batticaloa) மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் உதவிப் பணிப்பாளர் இந்த அறிவுறுத்தலை வழங்கியுள்ளார்.
இது தொடர்பில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது,
"சூறாவளி உருவாகி இன்று இரவு 2.00 மணிக்கு கிழக்கு மாகாணம் மற்றும் கல்முனையை தாக்கும் என்று பரப்பப்படும் வதந்திகளை நம்பவேண்டாம்.
உடன் அறிவிப்பு
அவ்வாறு ஒன்று உருவாகும் பட்சத்தில் மக்களுக்கு அது தொடர்பில் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் ஊடாக உடனடியாக அறிவிக்கப்படும் என்பதனை மிகவும் பொறுப்புடன் அறியத்தருகின்றோம்.
மேலும் வங்காள விரிகுடாவில் ஏற்பட்டுள்ள தாழமுக்கம் காரணமாக அதிக மழைவீழ்ச்சி கிடைக்கக்கூடிய வாய்ப்பு காணப்படுவதனால் அனைவரும் வெள்ள அனர்த்தத்துக்குரிய முன்னாயத்தங்களை மேற்கொள்ளுமாறு கேட்டு கொள்ளப்படுகின்றீர்கள்" என குறிப்பிட்டுள்ளார்.

பிரித்தானியாவின் தடை உணர்த்துவது..! 14 மணி நேரம் முன்

ட்ரம்பின் வரி யுத்தம்... 5 விமானங்களில் ஐபோன்களுடன் இந்தியாவில் இருந்து வெளியேறிய ஆப்பிள் நிறுவனம் News Lankasri

ட்ரம்புக்கு விடுக்கப்பட்ட பகிரங்க கொலை மிரட்டல்... எதற்கும் தயார் நிலையில் ஈரான் இராணுவம் News Lankasri

SBI சேமிப்பு திட்டத்தில் ரூ.2 லட்சம் டெபாசிட் செய்து ரூ.32 ஆயிரம் வட்டியை பெறலாம்.., என்ன திட்டம் தெரியுமா? News Lankasri
