பொதுமக்களே அவதானம்! நீங்கள் ஏமாற்றப்படலாம்..
தொடர்ந்து வரும் பண்டிகைக் காலத்தை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் விசேட சோதனை நடவடிக்கைககள் மேற்கொள்ளப்படவுள்ளன.
எதிர்வரும் 15ஆம் திகதி முதல் இவ்வாறு சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று நுகர்வோர் அதிகார சபை தெரிவித்துள்ளது.
பொதுமக்கள் ஏமாற்றப்படலாம்
அதற்கான விசேட வேலைத்திட்டங்கள் தயாரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்படி, பண்டிகைக் காலங்களில் காலாவதியான மற்றும் போலியான அல்லது மாற்றப்பட்ட தகவல்களுடன் பல பொருட்கள் சந்தைக்கு வருவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம் உள்ளன. இதன் காரணமாக பொதுமக்கள் ஏமாற்றப்படலாம் என்பதால் விசேட சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளன.
பண்டிகைக் காலங்களில் அத்தியாவசியப் பொருட்கள் மட்டுமின்றி, ஆடைகள், மின்சாதனப் பொருட்கள் மற்றும் பிற பொருட்களுக்கும் அதிக கேள்வி நிலவும் என்பதால் இவ்வாறான சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளன.
மேலும், இவ்வாறான மோசடி நடவடிக்கைககள் குறித்து பொதுமக்கள் அவதானத்துடன் இருப்பதுடன், ஏதேனும் முறைப்பாடுகள் இருந்தால் 1977 என்ற தொலைபேசி இலகத்தின் ஊடாக தெரியப்படுத்த முடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

புதிய சாதனை படைத்த அனிருத்தின் சென்னை இசை நிகழ்ச்சி.. 45 நிமிடத்திற்குள் அனிருத்தின் #Hukum புதிய சாதனை Cineulagam
