எரிவாயுவை சேமித்து வைப்பதை தவிர்க்கவும்! பொதுமக்களுக்கு அறிவுறுத்தல்
இலங்கையில் நிலவும் நீண்டகால லாஃப்ஸ் (Laugfs) மற்றும் லிட்ரோ (Litro) எரிவாயு தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்ய முன்னெடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இதன்படி பெப்ரவரி மாதத்திற்காக 28,000 மெட்ரிக் தொன் எரிவாயு முன்பதிவு செய்யப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்டுள்ள ஹோட்டல்கள் மற்றும் நுகர்வோர்
இதில் ஒரு கப்பல் சனிக்கிழமை (28) இரவும், மற்றொன்று ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 1) காலையும் நாட்டை வந்தடையவுள்ளன.

முன்னதாக நாளொன்றுக்கு 1,200 மெட்ரிக் தொன் விநியோகிக்கப்பட்டது. தற்போது தேவை கருதி அது 1,700 மெட்ரிக் தொன்னாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
லாஃப்ஸ் எரிவாயு தட்டுப்பாட்டால் பாதிக்கப்பட்டுள்ள ஹோட்டல்கள் மற்றும் நுகர்வோருக்கு லிட்ரோ நிறுவனம் தற்காலிகமாக சிலிண்டர்களை வழங்கி வருகிறது.
எரிவாயு முன்பதிவு
லாஃப்ஸ் நிறுவனம் தனது மாபிம (Mabima) களஞ்சியசாலையின் செயற்பாடுகளை எதிர்வரும் சனிக்கிழமை (பெப் 28) முதல் மீண்டும் ஆரம்பிக்கவுள்ளது.
இதன் மூலம் தமது விநியோக வலைப்பின்னல் வழமைக்குத் திரும்பும் என நிறுவனம் உறுதியளித்துள்ளது.
மார்ச் மாதத்திற்காக மேலதிகமாக 38,000 மெட்ரிக் தொன் எரிவாயு ஏற்கனவே முன்பதிவு செய்யப்பட்டுள்ளது.
மார்ச் 12 ஆம் திகதியளவில் சுமார் 40,000 புதிய சிலிண்டர்கள் சந்தைக்கு விநியோகிக்கப்படவுள்ளன. நுகர்வோர் அச்சமடைந்து அதிகளவில் எரிவாயுவை சேமித்து வைப்பதைத் (Panic buying) தவிர்க்குமாறு லிட்ரோ நிறுவனத் தலைவர் சன்ன குணவர்தன கோரிக்கை விடுத்துள்ளார்.