அரச ஊழியர்களின் பணி அட்டவணையில் மாற்றம்
ரமழானில் முஸ்லிம் அரச ஊழியர்கள் சமய வழிபாடுகளை மேற்கொள்வதற்கான பணி அட்டவணையை ஏற்பாடு செய்யுமாறு அரச நிறுவனங்களுக்கு பொது நிர்வாக அமைச்சு அறிவித்துள்ளது.
அமைச்சின் செயலாளர்கள், மாகாண பிரதம செயலாளர்கள், திணைக்களத் தலைவர்கள், அரச கூட்டுத்தாபனங்கள் மற்றும் சட்டப்பூர்வ சபைகளுக்கு சுற்றறிக்கை ஒன்றை விடுத்து இது தொடர்பான அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இவ்வருட ரமழான் பண்டிகை மார்ச் 12 ஆம் திகதி முதல் ஏப்ரல் 11 ஆம் திகதி வரை நடைபெறவுள்ள நிலையில், அக்காலப்பகுதியில் முஸ்லிம் அரச உத்தியோகத்தர்கள் சமய வழிபாடுகளை உரிய முறையில் மேற்கொள்ள முடியும் என சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

விசேட விடுமுறைக்கு அனுமதி
தவிர்க்க முடியாத சந்தர்ப்பங்களில் மாத்திரமே விசேட விடுமுறைக்கு அனுமதி வழங்கப்பட வேண்டுமென பொது நிர்வாக அமைச்சு வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ரமழான் நிறைவடைவதற்கு 14 நாட்களுக்கு முன்னர், தகுதியான முஸ்லிம் அதிகாரிகளுக்கு பண்டிகை முற்பணம் வழங்கப்படும் என பொது நிர்வாக அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
பிரபல சீரியல் நடிகரை திருமணம் செய்துகொண்ட நடிகை சியாமந்தா.. அழகிய ஜோடிக்கு குவியும் வாழ்த்துகள் Cineulagam
பிரித்தானிய அரசியலையே மாற்றும் என எதிர்பார்க்கப்படும் தேர்தல்: வாக்களிப்பு துவங்கியது... News Lankasri
ரொனால்டோவுக்கு அதிர்ச்சி கொடுத்த டிஆர் காங்கோ: ஃபிபா உலகக்கிண்ணத்தில் ரசிகர்கள் ஏமாற்றம் News Lankasri
ஈரான் ஒப்பந்தத்துக்குப் பிறகு ஹார்முஸை கடந்த முதல் 3 எண்ணெய் கப்பல்கள்., மத்திய கிழக்கில் தொடரும் பதற்றம் News Lankasri