சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள வெள்ளைநிற நீர்த்தாரை வண்டி: இந்திய தூதரகம் விளக்கம்
இந்திய கடனுதவியின் கீழ் இலங்கை அரசாங்கம் நீர்த்தாரை வண்டியை இறக்குமதி செய்துள்ளதாக வெளியான தகவல்களில் உண்மை இல்லை என இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.
நாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ள வெள்ளைநிற நீர்த்தாரை வண்டி பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் ஐக்கிய நாடுகளின் அமைதிகாக்கும் பணிகளுக்காக பயன்படுத்தப்படும் எனவும் பிரசன்ன ரணதுங்க தெரிவித்திருந்தார்.
போராட்டங்களை ஒடுக்க பாதுகாப்பு தரப்பினர் பயன்படுத்தும் புதிய நீர்த்தாரை வாகனம் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தின் ஊடாக இலங்கைக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியிருந்தது.
கொழும்பில் மக்களை ஒடுக்க இந்தியா வழங்கிய அதிதொழில்நுட்ப உதவி |
இந்நிலையில், விசேடமாக நாட்டில் நிலவும் டொலர் நெருக்கடி மற்றும் இந்தியாவிடம் கடன் வாங்கும் சூழ்நிலையில், இதுபோன்ற பணத்தை செலவிடுவது குறித்து சமூக வலைதளங்களிலும் கடுமையாக விமர்சனங்கள் எழுந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.



