கொழும்பில் மக்களை ஒடுக்க இந்தியா வழங்கிய அதிதொழில்நுட்ப உதவி
போராட்டங்களை ஒடுக்க பாதுகாப்பு தரப்பினர் பயன்படுத்தும் புதிய நீர்த்தாரை வாகனம் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தின் ஊடாக இலங்கைக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பொலிஸ் விசேட அதிரடிப்படையினரின் பாவனைக்காக வாகனம் கொண்டுவரப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
இந்த நிலையில் விசேட அதிரடிப்படை அதிகாரிகள் அங்கு வந்து விசேட பாதுகாப்பின் கீழ் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் இருந்து வாகனம் கொண்டு செல்லப்பட்டுள்ளது.
இந்த நீர்த்தாரை வாகனம் இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
விசேடமாக நாட்டில் நிலவும் டொலர் நெருக்கடி மற்றும் இந்தியாவிடம் கடன் வாங்கும் சூழ்நிலையில், நாட்டு மக்களுக்கு எதிராக அடக்குமுறைக்கு இதுபோன்ற பணத்தை செலவிடுவது குறித்து சமூக வலைதளங்களிலும் கடுமையாக விமர்சிக்கப்பட்டுள்ளது.
பொலிஸ் தலைமையகத்தில் உள்ள பல பொறுப்பான அதிகாரிகளைத் தொடர்பு கொண்டு இவ்விடயம் தொடர்பில் விசாரிக்க முயற்சித்த போதும் அது பலனளிக்கவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த 6 ஆம் திகதி மாலை 4.55 மணியளவில் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் இருந்து விசேட பாதுகாப்பின் கீழ் தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் ஊடாக கொண்டு செல்லப்பட்டுள்ளது.



பதினாறாவது மே பதினெட்டு 37 நிமிடங்கள் முன்

சரிகமப L'il Champs வின்னர் திவினேஷ் தனது தந்தைக்கு கொடுத்த மிகப்பெரிய பரிசு.. இதோ பாருங்க Cineulagam

ஆபரேஷன் சிந்தூர்... தாக்குதலுக்கு முன்பே பாகிஸ்தானுக்கு தெரியும்: வெளிவிவகார அமைச்சர் கருத்தால் குழப்பம் News Lankasri

சிறந்த அப்பாவுக்கு உதாரணமாக திகழும் ஆண் ராசியினர் இவர்கள் தானாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan
