விமான சேவைகள் மீள ஆரம்பம்! ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் முக்கிய அறிவிப்பு
மத்திய கிழக்கில் தொடரும் பதற்றங்களுக்கு மத்தியில் ரியாத் மற்றும் டுபாய்க்கான தமது அன்றாட விமான சேவைகளை மீள ஆரம்பிப்பதாக ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.
மத்திய கிழக்கில் நிலவும் சூழ்நிலையைத் தொடர்ச்சியாக கண்காணித்து, அதன் அடிப்படையில் பயணிகளின் பாதுகாப்பு மற்றும் நலனிற்கு முன்னுரிமை அளித்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது.
விமான சேவைகள்
இன்று (09) வெளியிடப்பட்ட அறிக்கையில், ரியாத்திற்கு தினசரி சேவைகள் இன்றிரவு மீண்டும் தொடங்கும் என்றும், துபாய்க்கான விமானங்கள் நாளை மீண்டும் தொடங்கும் என்றும் தேசிய விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதன்படி, ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் பின்வரும் விமானங்களை இயக்க திட்டமிட்டுள்ளன.
UL265 - கொழும்பிலிருந்து ரியாத், மாலை 6.15 மணிக்கு புறப்படும்.
UL266 - ரியாத் முதல் கொழும்பு, இரவு 10.35 மணிக்கு புறப்படும்.
UL231 - கொழும்பிலிருந்து துபாய், பிற்பகல் 12.40 மணிக்கு புறப்படும்.
UL232 - துபாய் முதல் கொழும்பு, மாலை 5.00 மணிக்கு புறப்படும்.

பயணிகளுக்கான அறிவுறுத்தல்
இது தொடர்பான மேலதிக விபரங்கள் மற்றும் மாற்று ஏற்பாடுகள் குறித்து ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் 24 மணிநேர தொடர்பு மையத்தை 1979 எனும் இலக்கத்தினூடாக தொடர்பு கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
மேலும் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் உத்தியோகபூர்வ இணையதளத்தில் www.srilankan.com பயணிகள் சரிபார்த்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகின்றார்கள்.
ஈரானின் வான்வழி தாக்குதல்களால் மீண்டும் உச்சக்கட்ட பதற்றம்! நடுவானில் சுட்டு வீழ்த்தப்படும் ட்ரோன்கள்