குழந்தைகள் உயிரிழக்க நேரிடும்: விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
வெப்பமான காலநிலை காரணமாக பாடசாலை விளையாட்டுப் போட்டிகள் மற்றும் வெளிப்புற விளையாட்டு நடவடிக்கைகளின் போது மாணவர்கள் அதிகளவில் தண்ணீர் அல்லது ஏனைய பானங்களை அருந்துமாறு கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் குழந்தை நல வைத்தியர் தீபால் பெரேரா அறிவுறுத்தியுள்ளார்.
இதன்போது வியர்வையுடன் அதிக சோடியம் வெளியேறுவதால், ஆரஞ்சு, இளநீர், தேங்காய் தண்ணீர், கஞ்சி, ஆரஞ்சு சூப் போன்ற பானங்களை அதிகளவில் பருகுமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
மேலும், விளையாட்டுப் போட்டிகளை சூரியன் மறைந்த பின்னர் மாலையில் நடத்தினால் நீர்ச்சத்து குறைவை பெருமளவில் தடுக்கலாம் எனவும் நிபுணர் தெரிவித்துள்ளார்.
உயிரிழக்க நேரிடுமென எச்சரிக்கை
வயல்வெளிகளில் வேலை செய்பவர்கள், வீதிகளில் வேலை செய்பவர்கள், இராணுவத்தில் பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்கள் நீர்ச்சத்து குறைபாட்டினால் பாதிக்கப்படக்கூடியவர்கள் அதிகளவு தண்ணீர் அருந்துவது அவசியம் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த நாட்களில் குழந்தைகள் பாடசாலைக்கு செல்லும் போது இரண்டு போத்தல் தண்ணீர் கொண்டு செல்வது அவசியம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இந்த நாட்களில் ஒரு நாளைக்கு இரண்டு முறை குளிப்பது மிகவும் பொருத்தமானது என்றும் குழந்தைகளை தண்ணீரில் விளையாட நீண்ட நேரம் அனுமதிப்பது பயனுள்ளதாக இருக்கும் என்று நிபுணர் கூறியுள்ளார்.
பாதுகாப்பு நடவடிக்கை
இதுபோன்ற நடவடிக்கைகள் எடுக்கப்படாவிட்டால், குழந்தைகளுக்கு வெப்ப அதிர்ச்சி ஏற்பட்டு உயிரிழக்க நேரிடும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும், குழந்தைகளை வாகனங்களில் நிறுத்திவிட்டு வெளியே செல்வதைத் தவிர்க்குமாறும்,வறட்சியான காலநிலையுடன் சரியான காற்றோட்டம் இன்மையினால், வாகனங்களில் வெப்பம் தாக்கி குழந்தைகள் உயிரிழக்க நேரிடும் என்றும் பெற்றோருக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





16 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 10 மணி நேரம் முன்

7ஆம் அறிவு படத்தில் வில்லனாக நடித்த இந்த நடிகரை நினைவிருக்கிறதா? இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா, இதோ பாருங்க Cineulagam

நந்தினியால் ஜனனிக்கு ஏற்பட்ட பிரச்சனை, ரவுண்டு கட்டிய குணசேகரன் ஆட்கள்.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam

உலகின் சக்தி வாய்ந்த கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் - முதலிடத்தில் உள்ள நாடு எது? News Lankasri
