எலியால் ஶ்ரீலங்கன் விமான சேவைக்கு ஏற்பட்ட சிரமம்
ஶ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான விமானமொன்றில் எலியொன்று புகுந்து கொண்டதனால் அதனை கண்டுபிடிக்க மூன்று நாட்கள் செலவிடப்பட்டுள்ளன.
பாகிஸ்தானின் லாகூரில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த விமானத்தில் இவ்வாறு எலி புகுந்துள்ளது.
விமானத்தில் எலியொன்று புகுந்துள்ளதாக பயணி ஒருவர் தெரிவித்துள்ளார்.
ஶ்ரீலங்கன் விமான சேவை
இந்த எலியை கண்டுபிடிப்பதற்கு மூன்று நாட்கள் சென்றதாக ஶ்ரீலங்கன் விமான சேவை நிறுவனம் தெரிவித்துள்ளது,
இந்த விமானம் எலியுடன் கடந்த 22ம் திகதி நாடு திரும்பியதாகவும் மூன்று நாள் முயற்சியின் பின்னர் எலி கண்டு பிடிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, ஶ்ரீலங்கன் விமான சேவை நிறுவனம் பெரும் நெருக்கடியை எதிர்நோக்கி வருவதாகவும் பல விமானங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

புலம் பெயர் தமிழர்களால் சிறீலங்காவை இலங்கையாக மாற்றிக்கொள்ள முடியுமா..! 19 மணி நேரம் முன்

மனைவியும் மாமியாரும் தினமும் துஷ்பிரயோகம் செய்வதாக அதிர்ச்சி புகார்! ரகசிய கமெரா மூலம் அம்பலமான கொடுமை News Lankasri

சூப்பர் சிங்கரில் ஏ.ஆர்.ரகுமான் ஹிட்ஸ் ரவுண்டில் சில போட்டியாளர்களுக்கு சர்ப்ரைஸ்.. என்ன தெரியுமா? Cineulagam

இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உண்மையை மட்டும் தான் பேசுவார்களாம்...யார் யார்ன்னு தெரியுமா? Manithan
