கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு செல்லும் பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு
கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு செல்லும் பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
அனைத்து பயணிகளும் நான்கு மணித்தியாலங்களுக்கு முன்னர் விமான நிலையத்திற்கு சமூகமளிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது இன்று முதல் நடைமுறைக்கு வந்துள்ளதாக கட்டுநாயக்க விமான நிலையம் அறிவித்துள்ளது.
புறப்படும் பயணிகள்
பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து புறப்படும் பயணிகள், தங்களது திட்டமிட்ட விமான புறப்படும் நேரத்திற்கு நான்கு (04) மணிநேரத்திற்கு முன்பாக விமான நிலையத்திற்குள் நுழைந்து பதிவு செய்ய அனுமதிக்கப்படுவார்கள்.
இந்த செயன்முறை காரணமாக பயணிகள் சேவைகளை மேம்படுத்துவதற்கும் விமான நிலையத்தினுள் பயணிகள் போக்குவரத்தைச் சீராக செயற்படுத்த முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.



