இலங்கையின் பொருளாதார மாற்றம்! மத்திய வங்கியின் முக்கிய அறிவிப்பு
கடந்த ஆண்டு (2024) மாகாண மொத்த உள்நாட்டு உற்பத்தியில் மேல் மாகாணம் 42.4 சதவீதமாக பொருளாதாரத்திற்கு அதிக பங்களிப்பை வழங்கியதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
மேல் மாகாணம் பொருளாதாரத்திற்கு மிகப்பெரிய பங்களிப்பாளராக பெயரிடப்பட்டிருந்தாலும், மத்திய வங்கி சமீபத்தில் வெளியிட்ட அறிக்கை, 2023 உடன் ஒப்பிடும்போது பொருளாதாரத்திற்கு அதன் பங்களிப்பு குறைந்துள்ளதாக காட்டுகின்றது.
உள்நாட்டு உற்பத்தியின் பங்களிப்பு
அதன்படி, 2023 ஆம் ஆண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 44 சதவீதமாக இருந்த மேல் மாகாணத்தின் பங்களிப்பு, 2024 இல் 42.4 சதவீதமாகக் குறைந்துள்ளது.

இதேபோல், வடமேற்கு மாகாணம் கடந்த ஆண்டு (2024) மொத்த உள்நாட்டு உற்பத்தியில் இரண்டாவது அதிகபட்ச பங்களிப்பை வழங்கியது, அதன் பங்களிப்பு 11.5 சதவீதமாக இருந்தது.
இதேபோல், மத்திய மாகாணம் கடந்த ஆண்டு (2024) மொத்த உள்நாட்டு உற்பத்தியில் மூன்றாவதாக அதிகபட்ச பங்களிப்பை வழங்கியது, அதன் பங்களிப்பு 10.7 சதவீதமாக இருந்தது.
நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி
மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிக்கை, 2024 ஆம் ஆண்டில் மத்திய, கிழக்கு, வடமேற்கு, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்கள் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் அளித்த பங்களிப்பு முந்தைய 2023 ஆம் ஆண்டை விட அதிகரித்துள்ளது என்பதை காட்டுகின்றது.

மேலும், 2023 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது 2024 ஆம் ஆண்டில் வடமத்திய மற்றும் தெற்கு மாகாணங்கள் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் அளித்த பங்களிப்பு குறைந்துள்ளது,
மேலும் பொருளாதாரத்திற்கு வடக்கு மாகாணத்தின் பங்களிப்பு 4.4 சதவீதமாக மாறாமல் உள்ளது என்று மத்திய வங்கி வெளியிட்டுள்ள சமீபத்திய அறிக்கை மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடற்கொள்ளையில் ஈடுபடும் ட்ரம்ப் நிர்வாகம்... எண்ணெய் கப்பல் விவகாரத்தில் ரஷ்யா கடும் தாக்கு News Lankasri
பிரித்தானியாவில் கிறிஸ்துமஸ் தினத்தன்று நிகழ்ந்த சோகம்: கொடூர தாக்குதலில் 80 வயது மூதாட்டி பலி News Lankasri
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் பாண்டியனாக நடிக்கும் ஸ்டாலின் முத்துவின் குடும்ப புகைப்படங்கள் Cineulagam
இந்தியாவிலேயே அதிகபட்ச விலை.. துரந்தர் ஓடிடி உரிமை வாங்கிய நெட்பிலிக்ஸ்! புஷ்பா 2 சாதனையை தகர்த்தது Cineulagam