2000 பொருட்களுக்கான இறக்குமதி தடை! நீடிக்கும் வாகனங்களுக்கான கட்டுப்பாடு
நாட்டில் கடுமையான பொருளாதார நெருக்கடி நிலை ஏற்பட்டபோது 2000 பொருட்களுக்கு இறக்குமதி கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன. அவை தற்போது தளர்த்துப்பட்டு வருவதுடன், வாகன இறக்குமதி மாத்திரம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது என்று நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய(Ranjith Siyambalapitiya) தெரிவித்துள்ளார்.
பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
வாகனங்களுக்கான இறக்குமதி தடை
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
நாட்டில் டொலர் பற்றாக்குறை ஏற்பட்டதன் காரணமாக எந்தப் பொருளை இறக்குமதி செய்வது என்பது தொடர்பான ஒரு முன்னுரிமை வழங்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
இப்படி பார்க்கும் போது வாகனம் என்பது இறுதி தெரிவாகவே காணப்பட்டது. நாட்டில் ஏற்கனவே தேவைக்கு அதிகமாக வாகனங்கள் காணப்படுகின்றன. ஐந்து பேருக்கு ஒரு வாகனம் என்று நிலையில் இலங்கையில் வாகனங்கள் உள்ளன.
இந்த நிலையில் நெருக்கடியின் போது கிட்டத்தட்ட 2000 பொருட்களுக்கு இறக்குமதி கட்டுப்பாடுகளை விதித்தோம். தற்போது அவை தளர்த்தப்பட்டு வருகின்றன. ஆனால் இன்னும் வாகன இறக்குமதி மட்டும் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
ஆனால் தேவைக்கு ஏற்ப தற்போது அதனை தளர்த்துவத்றகு நடவடிக்கை எடுத்திருக்கின்றோம். அதன் அடிப்படையிலேயே அண்மையில சுற்றுலாத் துறைக்கு 1000 வாகனங்கள் இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுத்தோம்.
அது மட்டுமின்றி இலங்கைக்கான வாகன தேவை தொடர்பாக ஆராய்வதற்காக ஒரு குழு நியமிக்கப்பட்டுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |