மீண்டும் வாகன இறக்குமதி செய்வது தொடர்பில் மத்திய வங்கியின் ஆளுநர் அளித்த பதில்
வாகன இறக்குமதி தொடர்பில் இலங்கை மத்திய வங்கியிடம் வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் கோரிக்கை முன்வைத்துள்ளது.
வாகனங்களை மீண்டும் இலங்கைக்கு இறக்குமதி செய்ய அனுமதி வழங்க வேண்டும் என தெரிவித்து இவ்வாறு கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
மத்திய வங்கி ஆளுநரின் பதில்
மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்கவுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இந்தக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஆனால் வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு தற்போதைக்கு அனுமதி வழங்க முடியாது என வங்கி ஆளுநர் கலந்துரையாடலில் தெரிவித்ததாக சங்கத்தின் தலைவர் என்.கே.கமகே தெரிவித்தார்.
இந்நாட்டில் ஏற்பட்டுள்ள அந்நியச் செலாவணி நெருக்கடியால், வாகன இறக்குமதி கடந்த 2021ஆம் ஆண்டு மே மாதம் 24ஆம் திகதி தற்காலிகமாக நிறுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.