மின்சார வாகன இறக்குமதி: விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை
நாடு முழுவதும் மின்சார வாகன சார்ஜிங் (charging points) மையங்களை நிறுவுவது தொடர்பில் சீன அரசாங்கத்தின் தலையீட்டை அமைச்சர் விஜித ஹேரத் கோரியுள்ளார்.
அதன்படி, இன்று (29) காலை வெளியுறவு அமைச்சகத்தில் சீன தூதர் குய் ஜென்ஹோங்குடன் (Qi Zhenhong) நடைபெற்ற சந்திப்பின் போது அமைச்சர் இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.
மின்சார வாகனங்கள் இறக்குமதி
சீனா உட்பட உலகளாவிய வாகன சந்தையிலிருந்து அதிக அளவில் மின்சார வாகனங்களை இறக்குமதி செய்ய இலங்கை விரும்புவதால், நாடு முழுவதும் சார்ஜிங் மையங்களை நிறுவுவது குறித்து இங்கு கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

அரசாங்கம் எதிர்காலத்தில் அதிக மின்சார பேருந்துகளை இறக்குமதி செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் அமைச்சர் கூறியுள்ளார்.
இதற்கிடையில், வெள்ளத்தால் சேதமடைந்த தொடருந்து பாதைகள் மற்றும் பாலங்களை புனரமைக்க சீன அரசாங்கத்திடமிருந்து அவசர உதவியை எதிர்பார்ப்பதாக அமைச்சர் விஜித ஹேரத் கூறியுள்ளார்.
இந்த முன்மொழிவை ஏற்றுக்கொண்ட சீன தூதர், இது தொடர்பாக சீன அரசாங்கத்திடம் தெரிவிக்கவும் ஒப்புக்கொண்டுள்ளார்.