வாகன உதிரிபாகங்களின் விலை தொடர்பில் நாடாளுமன்றில் கூறப்பட்ட விடயம்
வாகன உதிரிபாகங்களின் விலையில் வரம்பற்ற அதிகரிப்பு பிரச்சினைக்கு விரைவில் தீர்வு காணப்படும் என இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க (Shehan Semasinghe) குறிப்பிட்டுள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றிய போது நாடாளுமன்ற உறுப்பினர் மொஹமட் முஸம்மில் (Mohamed Mussammil) வாகனங்கள் மற்றும் உதிரி பாகங்களின் விலை பெருமளவில் அதிகரித்துள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளார்.
இதற்கு பதிலளித்த சந்தர்ப்பத்திலேயே இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க குறித்த விடயத்தை கூறியுள்ளார்.
மேலும் தெரிவிக்கையில்,
டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதியை வலுப்படுத்த அரசாங்கம் பல நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
அத்துடன் வாகன உதிரி பாகங்களை இறக்குமதி செய்வதற்கு இதுவரை தடை விதிக்கப்படவில்லை என தெரிவித்துள்ளார்.