இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட திரவ உர கொள்வனவில் மோசடி
இந்திய உர நிறுவனத்திடம் இருந்து நனோ நைட்ரஜன் திரவ உரத்தை இறக்குமதி செய்ய, கடந்த அரசாங்கம் சந்தை விலையை விட இரண்டு மடங்கு கொடுப்பனவை அதிகமாக செலுத்தியமை கணக்காய்வின் மூலம் தெரியவந்துள்ளது.
2021ஆம் ஆண்டுக்கான தேசிய கணக்காய்வாளர் நாயக அலுவலக அறிக்கையில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது.
உடன்படிக்கையின்படி இந்திய விவசாயிகள் உரங்கள் கூட்டுறவு லிமிடெட், அதன் உள்ளூர் முகவர் யுனைடெட் ஃபார்மர்ஸ் டிரஸ்ட் மூலம் உரத்தை விநியோகப்பதற்காக தேர்ந்தெடுக்கப்பட்டது.
வெளிநாட்டு நாணய தட்டுப்பாடு
அந்த நேரத்தில் இலங்கையின் வெளிநாட்டு நாணய தட்டுப்பாடு காரணமாக, இந்திய நிறுவனம் கடன் அடிப்படையில் உரத்தை வழங்க முன்வந்தது.
இதனையடுத்து 2021 நவம்பர் 22 ஆம் திகதியன்று 500 மில்லி லீட்டர் கொண்ட 4,250,000 போத்தல்கள் (2,125,000 லிட்டர்கள்) ஒன்று 12.45 டொலர் அடிப்படையில் இறக்குமதி செய்ய ஒப்பந்தம் செய்யப்பட்டது.
எனினும் நான்கு தடவைகளில் 306,454 உர போத்தல்கள் மட்டுமே இறக்குமதி செய்யப்பட்டுள்ளன.
எனினும் இலங்கை அரசாங்கம் 711,863,096 ரூபாயை செலவு செலுத்தியுள்ளது.கணக்காய்வாளர் நாயகம் டபிள்யூ.பி.சி. விக்கிரமரத்ன தனது பரிந்துரைகளில், முதல் பங்குக்காக(100,224 போத்தல்கள்) அதிகப் பணம் செலுத்தியது.
திரும்பப் பெற நடவடிக்கை
இந்தநிலையில் மேலதிகமாக செலுத்தியுள்ள 49,846,406 ரூபாயை உரிய நிறுவனத்திடமிருந்தோ அல்லது சரியான மதிப்பீட்டின்றி பணம் செலுத்த அனுமதித்த தரப்பினரிடமிருந்தோ திரும்பப் பெற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கணக்காய்வாளர் நாயகம் அறிவுறுத்தியுள்ளார்.
இந்திய உற்பத்தி நிறுவனத்தின் இணையத்தளத்தில் 500அட நனோ திரவ உரப் போத்தல் ஒன்றின் விலை 240 இந்திய ரூபாய்கள் அதாவது 3.185 டொலருக்கு சமமானதாக குறிப்பிடப்பட்டிருந்தாலும், போத்தல் ஒன்று 5 டொலர் விலையில் இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக கணக்காய்வு விசாரணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |