44 ஆண்டுகளைக் கடந்தும் தொடரும் கொடிய சட்டம் - சிறைக்குள் வாடும் நிரபராதி தொடர்பில் சட்டத்தரணி கவலை

Sri Lanka Army Sri Lanka Police Sri Lankan Tamils Sri Lankan Peoples Sri Lanka Government
By Rakesh Jun 14, 2026 11:16 AM GMT
Report

இலங்கையில் தற்காலிக ஏற்பாடாகக் கொண்டுவரப்பட்ட பயங்கரவாதத் தடைச் சட்டம், 44 ஆண்டுகளைக் கடந்தும் இன்னும் தொடர்ந்து பயன்படுத்தப்பட்டு வருகின்றது என ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி. தவராசா தெரிவித்துள்ளார்.

இந்தக் கொடூரமான சட்டத்தின் காரணமாகக் குற்றமற்ற பல நிரபராதிகளின் ஒட்டுமொத்த ஆயுட்காலமும் கூட சிறையிலேயே முடிவடையும் மிக மோசமான நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் தொடர்பில் விசேட அறிவிப்பு

சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் தொடர்பில் விசேட அறிவிப்பு

பயங்கரவாத தடைச்சட்டம்

அவர் மேலும் தெரிவிக்கையில்,

"பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுபவர்களுக்கான விசாரணைக் காலம், சட்டமா அதிபர் திணைக்களத்தால் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் காலம் மற்றும் நீதிமன்ற விசாரணை முடிவடையும் காலம் ஆகியவற்றுக்கு எந்தவொரு சட்டபூர்வ காலவரையறையும் இல்லை.

44 ஆண்டுகளைக் கடந்தும் தொடரும் கொடிய சட்டம் - சிறைக்குள் வாடும் நிரபராதி தொடர்பில் சட்டத்தரணி கவலை | Impact Of Pta Act On Youth

பாதுகாப்பு அமைச்சரின் (ஜனாதிபதி) அனுமதியுடன், ஒவ்வொரு 3 மாதங்களுக்கும் ஒருமுறை பொலிஸாரின் அறிக்கையின் அடிப்படையில் ஒருவரை 18 மாதங்கள் வரை தடுத்து வைக்க முடியும்.

இதனை நீதிமன்றத்தில் கூட கேள்விக்குட்படுத்த முடியாது. இந்தச் சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்படும் வழக்குகளில் 95 வீதமானவை, கைதிகளிடம் சித்திரவதைகள் மற்றும் அச்சுறுத்தல்கள் மூலம் பெறப்படும் 'சுய ஒப்புதல் வாக்குமூலங்களை' மாத்திரமே அடிப்படையாகக் கொண்டவை.

சிறைக்குள் வாடும் நிரபராதிகள்

இதனைத் தடுக்கும் பொருட்டு, சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்ட 10 நாள்களுக்குள் உயர்நீதிமன்றத்தில் அடிப்படை மனித உரிமை மனுக்களைத் தாக்கல் செய்து நாம் பல வழக்குகளை விரைவுபடுத்தினோம்.

யுத்தம் முடிவடைந்த பின்னரும்கூட தமிழ் இளைஞர்கள் மட்டுமன்றி ஊடகவியலாளர்கள், வங்கி முகாமையாளர்கள் எனப் பல தரப்பினரும் இந்தச் சட்டத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்டனர்.

44 ஆண்டுகளைக் கடந்தும் தொடரும் கொடிய சட்டம் - சிறைக்குள் வாடும் நிரபராதி தொடர்பில் சட்டத்தரணி கவலை | Impact Of Pta Act On Youth

நான் நேரில் வாதாடிய வழக்குகளில் பலர் 15 முதல் 18 ஆண்டுகள் வரை எந்தவிதக் குற்றமுமின்றி சிறையிலிருந்துவிட்டு, இறுதியில் நீதிமன்றத்தால் “நிரபராதிகள்” என விடுதலையாகியுள்ளனர்.

அதேபோன்று, 22 வருடங்களாக இன்னும் விசாரணைகளின்றி சிறையில் வாடும் கைதிகளும் உள்ளனர். இறுதியில் அவர்கள் நிரபராதி என நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டாலும், ஒரு மனிதனின் ஒட்டுமொத்த இளமைக் காலமும், ஆயுட்காலமும் சிறையிலேயே முழுமையாக வீணடிக்கப்பட்டு விடுகின்றது என்றார்.   

சஹ்ரானின் சட்டத்தரணி எனும் குற்றச்சாட்டு பொய்..! சர்ச்சைகளுக்கு பதிலடிக் கொடுத்த மைத்திரி குணரத்ன

சஹ்ரானின் சட்டத்தரணி எனும் குற்றச்சாட்டு பொய்..! சர்ச்சைகளுக்கு பதிலடிக் கொடுத்த மைத்திரி குணரத்ன

முடிவடையும் காலக்கெடு! இலங்கையில் கட்டாயமாகும் நடைமுறை - வெளியானது அறிவிப்பு

முடிவடையும் காலக்கெடு! இலங்கையில் கட்டாயமாகும் நடைமுறை - வெளியானது அறிவிப்பு


மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US