காலியில் நங்கூரமிடப்பட்டுள்ள இந்தியா கடற்படை கப்பல்கள் - செய்திகளின் தொகுப்பு.
இந்திய கடலோரக் காவல் படையின் ரோந்துக்கப்பலான சமர்த் மற்றும் அதிவேக ரோந்துக் கப்பலான அபிநவ் ஆகியவை 2024பெப்ரவரி 27 ஆம் திகதி காலிக்கு வருகைதந்துள்ளன.
2024 மார்ச் 01 வரை அங்கு தங்கி நிற்கும் இக்கப்பல்கள் 2024 மார்ச் 02-05 வரையில் கொழும்புக்கு விஜயம் மேற்கொண்டு இலங்கை விஜயத்தை நிறைவுசெய்து புறப்படவுள்ளன.
குறித்த இந்திய கடலோரக் காவல்படை கப்பல்களின் கட்டளை அதிகாரிகளான பிரதி தலைமை இயக்குனர் பி. பிரதீப் குமார் மற்றும் தளபதி பிரபாத் குமார் ஆகியோர் இலங்கை கடலோரக் காவல் படையின் பணிப்பாளர் நாயகம் மற்றும் ஏனைய சிரேஸ்ட அதிகாரிகளை இவ்விஜயத்தின்போது சந்திக்கவுள்ளனர்.
இவை உள்ளிட்ட மேலும் பல செய்திகளை உள்ளடக்கி வருகின்றது இன்றைய நாளுக்கான மதிய நேர செய்திகளின் தொகுப்பு...
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |