இலங்கையில் மாணவர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள பாதிப்பு - அதிர்ச்சி தகவல் வெளியிட்ட புலனாய்வு பிரிவு
பாடசாலை மற்றும் பல்கலைக்கழகளில் ஐஸ் போதைப்பொருள் வேகமாக பரவியுள்ளதாக பொலிஸ் புலனாய்வுத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
8ஆம் வகுப்பு முதல் உயர்தரம் வரையில் கல்வி பயிலும் மாணவர்கள் சிலரும், பல்கலைக்கழக மருத்துவ, பொறியியல் பீடங்களில் பயிலும் இளைஞர்கள் சிலரும் ஐஸ் போதை பொருளுக்கு அடிமையாகி இருப்பது தெரியவந்துள்ளது.
ஐஸ் குடித்தால் உறக்கம் வராது எனவும் இதனால் இரவில் படிக்க முடியும் என்ற தவறான எண்ணமுமே இதனை பயன்படுத்த முக்கிய காரணம் என புலனாய்வு அமைப்புகள் தெரிவிக்கின்றன.
போதை பொருள் கடத்தல்காரர்கள் முதலில் பாடசாலை அளவில் மாணவர்களுக்கு கடனுக்கு வழங்குகின்றனர். மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் அதற்கு பின்னர் அடிமையான பிறகு, கடனை அடைக்க சிறுவர்களை ஐஸ் போதைப்பொருளை விற்க வைப்பதையும் புலனாய்வு அமைப்புகள் கண்டுபிடித்துள்ளன.
சில வழிபாட்டுத் தலங்களின் மதகுருமார்கள், சில பொலிஸ் அதிகாரிகள், சில பாதுகாப்புப் படையைச் சேர்ந்தவர்கள் ஐஸ் குடிக்கும் பழக்கத்திற்குள்ளாகி உள்ளதாக புலனாய்வு அமைப்புகளின் விசாரணையில் தெரியவந்துள்ளது.
கடந்த காலங்களில் பாரியளவில் ஹெரோயின் கடத்தலில் ஈடுபட்டவர்கள் தற்போது ஐஸ் போதைப்பொருள் கடத்தலுக்கு மாறியுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
குறிப்பாக கடந்த காலங்களில் பல பொலிஸ் அதிகாரிகள் ஐஸ் போதைப்பொருளுடன் பிடிபட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Saroja devi death: பழம்பெரும் நடிகை சரோஜா தேவி 87 வயதில் காலமானார்.. அதிர்ச்சியில் திரையுலகம் Cineulagam

ஆதி குணசேகரனுக்கு இரண்டாவது அடி.. பெண்கள் அதிரடி! எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் அப்டேட் Cineulagam
