ஒழுக்கமற்ற ஓர் பாலின நடத்தையை ஊக்குவிக்கப் போவதில்லை! நிலைப்பாட்டை வெளியிட்ட அநுர
ஒழுக்கமற்ற ஓர் பாலின நடத்தையை ஊக்குவிப்பது அரச கொள்கையோ அல்லது சுற்றுலாத் துறையின் அடிப்படைக் கொள்கையோ அல்ல என்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க கூறியுள்ளார்.
அஸ்கிரிய பீடத்தின் துணைத் தலைவராக புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட வணக்கத்திற்குரிய நாரம்பனாவே ஆனந்த தேரருக்கு ஸ்ரீ சன்னஸ் பத்திரத்தை வழங்கும் அரசு விழாவில் இன்று (03) பிற்பகல் பங்கேற்று உரையாற்றும் போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்துள்ளார்.
நாட்டின் சுற்றுலாத் துறையை மேம்படுத்துவதற்கு அரசாங்கம் நான்கு அடிப்படைக் கொள்கைகளில் செயல்படும் என்று ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளார்.
இன்று இரவு வரை அவதானமாக இருங்கள்..! வவுனியா - முல்லைத்தீவு உட்பட்ட சில மாவட்டங்களுக்கு அவசர அறிவிப்பு
சுற்றுலாத் துறை
இதன்படி நாட்டின் சுற்றுலாத் துறையை மேம்படுத்துவதற்கு அரசாங்கம் நான்கு அடிப்படைக் கொள்கைகளைப் பயன்படுத்தும் என்று ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார்.

அத்தோடு, நாட்டின் 2,500 ஆண்டுகளுக்கும் மேலான பழமையான நாகரிகம், நாட்டின் இயற்கையின் அழகு, விருந்தோம்பல் மற்றும் வனவிலங்குப் பகுதிகள் மற்றும் விலங்குகளை நடது நாடு கொண்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.