யாழ். நபரிடம் லஞ்சம் கோரிய குடிவரவு அதிகாரிக்கு நேர்ந்த கதி
தமிழர் ஒருவரிடம் பெருந்தொகை லஞ்சம் கோரிய குடிவரவு மற்றும் குடியகல்வு அதிகாரி ஒருவர் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டுள்ளார்.
பாதிக்கப்பட்டவரான யாழ்ப்பாணத்தை சேர்ந்த நபரினால் செய்யப்பட்ட முறைப்பாட்டுக்கு அமைய அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இலங்கையரான அவரை வீசா இல்லையென குற்றம் சாட்டி 500,000 ரூபாயை இலஞ்சமாக கோரியதாக முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குடிவரவு மற்றும் குடியகல்வு
இந்தியாவை சேர்ந்த நபர் என்ற ரீதியில் குறித்த இலங்கையர் வெலிசறை குடிவரவு மற்றும் குடியகல்வு தடுப்பு தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் மையத்திலிருந்து விடுவிப்பதற்கு தேவையான ஏற்பாடுகளை செய்வதற்காக சந்தேகநபர் லஞ்சம் கோரியதாக பாதிக்கப்பட்டவர் தெரிவித்துள்ளார்.
குடிவரவு அதிகாரி
சந்தேகநபர் குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் வெலிசறை தடுப்பு மையத்தில் பணிபுரியும் குடிவரவு அதிகாரி ஆவார்.

சந்தேகநபரான குடிவரவு அதிகாரியை கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
அணையா விடுதலைத்தீ சங்கரின் சாவு எப்படி வீரசரித்திரமானது.. 13 மணி நேரம் முன்
அவுஸ்திரேலியா அணிக்காக சதமடித்த முதல் இந்தியர்! 184 பந்துகளில் 163 ஓட்டங்கள்..சிட்னியில் ருத்ர தாண்டவம் News Lankasri
வெட்ட வந்த அறிவுக்கரசி, கடும் ஷாக்கில் விசாலாட்சி... எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam