ஐஎம்எப்இன் முன்மொழிவுகளை எதிர்க்கட்சிகளுக்கு தெரியப்படுத்துவோம்: ரணில் உறுதி

M. A. Sumanthiran Ranil Wickremesinghe IMF Sri Lanka
By Dharu Mar 11, 2024 01:34 PM GMT
Report

சர்வதேச நாணய நிதியத்தின் முன்மொழிவுகள் குறித்து எதிர்க்கட்சிகளின் தலைவர்களுக்கு தெரியப்படுத்துவோம் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

மேலும், அனைத்து நடவடிக்கைகளையும் வெளிப்படைத்தன்மையுடன் செயற்படுத்துவதே அரசாங்கத்தின் நோக்கமாகும் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்தின் முன்மொழிவுகள் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் அழைக்கப்பட்டிருந்த எதிர்க்கட்சித் தலைவர்களின் கூட்டம் இன்று (11.03.2024) முற்பகல் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது.

ஏழை மக்களை பாதிக்கும் செயற்பாடுகளுக்கு இணங்க முடியாது : சுமந்திரன் திட்டவட்டம்

ஏழை மக்களை பாதிக்கும் செயற்பாடுகளுக்கு இணங்க முடியாது : சுமந்திரன் திட்டவட்டம்

சுமந்திரன் வலியுறுத்து

இந்தக் கலந்துரையாடலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடளுமன்ற உறுப்பினர் எம். ஏ. சுமந்திரனும் கலந்துகொண்டதுடன் சர்வதேச நாணய நிதியத்துடனான கலந்துரையாடலில் அனைத்து தரப்பினரும் ஏற்றுக்கொள்ளும் தீர்மானங்களை எட்டுவதற்கான அரசாங்கத்தின் அர்ப்பணிப்பு இங்கு வலியுறுத்தப்பட்டது.

ஐஎம்எப்இன் முன்மொழிவுகளை எதிர்க்கட்சிகளுக்கு தெரியப்படுத்துவோம்: ரணில் உறுதி | Imf Talks Ranil Sumanthran

சர்வதேச நாணய நிதியத்தினால் தயாரிக்கப்பட்ட பகுப்பாய்வு தரவுகளுடன் கூடிய அறிக்கைகள் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட வேண்டுமென நாடாளுமன்ற உறுப்பினர் எம். ஏ. சுமந்திரன் வலியுறுத்தியுள்ளார்.

இந்தச் செயற்பாடுகள் அனைத்தையும் வெளிப்படைத் தன்மையுடன் முன்னெடுப்பதே அரசாங்கத்தின் நோக்கமாகும் எனத் தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, அது தொடர்பான தரவு பகுப்பாய்வு அறிக்கைகள் இந்தக் கலந்துரையாடலில் கலந்துகொண்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் நாடாளுமன்றத்திற்கு வழங்கப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், சர்வதேச நாணய நிதியத்துடன் இணைந்து செயற்படுவதே அரசாங்கத்தின் விருப்பம் என தெரிவித்த ஜனாதிபதி, இந்த முன்மொழிவுகளை சர்வதேச நாணய நிதியத்துடன் மேலும் கலந்துரையாடுவதற்காக சுமந்திரன் உட்பட ஏனைய எதிர்க்கட்சி உறுப்பினர்களையும் கலந்துரையாடலுக்கு அழைக்கவுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

உலக நாடுகளின் தரப்படுத்தலில் இலங்கைக்கு கிடைத்துள்ள அங்கீகாரம்

உலக நாடுகளின் தரப்படுத்தலில் இலங்கைக்கு கிடைத்துள்ள அங்கீகாரம்

சர்வதேச நாணய நிதியத்தின் அறிக்கை

அந்தக் கலந்துரையாடல்களில் கலந்துகொள்ளத் தயாராக இருப்பதாகத் தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், சர்வதேச நாணய நிதியத்துடன் இணைந்து இந்த வேலைத்திட்டத்தில் அரசாங்கம் முன்னெடுக்கும் சாதகமான மற்றும் சரியான வேலைத்திட்டத்திற்கு தனது ஆதரவை வழங்குவதாகத் கூறியுள்ளார்.

ஐஎம்எப்இன் முன்மொழிவுகளை எதிர்க்கட்சிகளுக்கு தெரியப்படுத்துவோம்: ரணில் உறுதி | Imf Talks Ranil Sumanthran

இருதரப்பு கடன் வழங்குநர்கள், வர்த்தக கடன் வழங்குநர்கள் மற்றும் சர்வதேச இறையாண்மை பத்திரம் வைத்திருப்பவர்களுடன் நடைபெற்று வரும் பேச்சுவார்த்தைகள் குறித்து திறைசேரியின் செயலாளர் மஹிந்த சிறிவர்தன, விரிவான விளக்கத்தை அளித்ததுடன், இந்த பேச்சுவார்த்தைத் சுற்றுகளை இந்த ஆண்டு ஜூன் மாத இறுதிக்குள் நிறைவு செய்ய எதிர்பார்ப்பதாகவும் கூறியுள்ளார்.

மேலும், சர்வதேச நாணய நிதியத்தின் ஆளுகைத் தீர்ப்பு தொடர்பான அறிக்கையின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த அரசாங்கம் செயற்பட்டு வருவதாகவும், அதற்கான விரிவான கட்டமைப்பு வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு அர்ப்பணிப்புடன் இருப்பதாகவும் மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க சுட்டிக்காட்டியுள்ளார்.

ஏப்ரலில் அரச ஊழியர்கள் சம்பள அதிகரிப்பு - ஜனாதிபதி வெளியிட்ட தகவல்

ஏப்ரலில் அரச ஊழியர்கள் சம்பள அதிகரிப்பு - ஜனாதிபதி வெளியிட்ட தகவல்

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 
GalleryGallery
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Munich, Germany

22 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Edgware, United Kingdom

28 Aug, 2024
மரண அறிவித்தல்

ஆனைக்கோட்டை, Markham, Canada

25 Aug, 2026
கண்ணீர் அஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புளியங்கூடல், Wilhelmshaven, Germany

01 Aug, 2026
16ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

Urumpirai, மன்னார் முருங்கன், Markham, Canada, Drancy, France

21 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு, கிளிநொச்சி, கொழும்பு, Crawley, United Kingdom

15 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கோப்பாய், Sudbury Hill, United Kingdom, Ealing, United Kingdom

27 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கோப்பாய், நீர்வேலி, Scarborough, Canada

20 Aug, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கல்வியங்காடு

30 Jul, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, மன்னார், கொழும்பு

28 Aug, 2021
15ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு சிற்பனை, வேலணை மேற்கு 8ம் வட்டாரம்

08 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, சவுதி அரேபியா, Saudi Arabia, Mitcham, United Kingdom

27 Aug, 2023
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை, Toronto, Canada

26 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தொண்டைமானாறு, Le Blanc-Mesnil, France

28 Aug, 2023
மரண அறிவித்தல்

சங்கானை, Toronto, Canada

23 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பலாலி, Toronto, Canada, உருத்திரபுரம்

24 Aug, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US