சர்வதேச நாணய நிதியத்தின் தீர்மானம் குறித்து 21ம் திகதி அறிவிப்பு!
இலங்கைக்கு வழங்கப்படவுள்ள சர்வதேச நாணய நிதியத்தின் நீட்டிக்கப்பட்ட கடன் வசதி குறித்து 21ம் திகதி முக்கிய அறிவிப்பொன்று வெளியிடப்படவுள்ளது.
இலங்கை எதிர்பார்க்கும் கடன் வசதிகளை வழங்குவது தொடர்பில் கலந்துரையாடுவதற்காக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்று சபையின் கூட்டம் மார்ச் 20 ஆம் திகதி நடைபெறவுள்ளது.
முக்கிய தீர்மானம்
அதன் பின்னர், இந்த செயற்குழுவில் விவாதிக்கப்பட்ட விடயங்கள் குறித்து தெரிவிக்கும் வகையில் செய்தியாளர் சந்திப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அமெரிக்க நேரப்படி 20ஆம் திகதி பிற்பகல், அதாவது இலங்கை நேரப்படி 21ஆம் திகதி காலை ஊடகவியலாளர் மாநாடு நடைபெறவுள்ளது.
சர்வதேச நாணய நிதியத்தின் சிரேஷ்ட தூதுவர் பீட்டர் ப்ரூயர் மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கை தூதரகத்தின் தலைவர் மசாஹிரோ நோசாகி ஆகியோர் இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொள்ளவுள்ளதாக சர்வதேச நாணய நிதியம் மேலும் தெரிவிக்கின்றது.
விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 18 பேர் உயிரிழப்பு - முன்னரே எச்சரித்த குடும்ப உறுப்பினர் News Lankasri
விக்ரமின் ரீல் மகள் சாராவா இது? ரன்வீர் சிங்குக்கு ஜோடி.. வெளிவந்த 'துரந்தர்' படத்தின் டிரைலர்.. Cineulagam