சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகளைச் சந்தித்த சஜித் தரப்பு
பொறுப்புள்ள கட்சி என்ற ரீதியில், இலங்கையின் பொருளாதார நெருக்கடியின் ஆழத்தையும் சிக்கலையும் ஐக்கிய மக்கள் சக்தி நன்கு புரிந்துகொண்டுள்ளது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.
சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகளை நேற்று (20) பிற்பகல் நாடாளுமன்றத்தில் சந்தித்துக் கலந்துரையாடியபோதே இதனை கூறியுள்ளார்.
இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அவர்,
ஊட்டச்சத்து குறைபாடு
குறிப்பாக, நாட்டின் பாதிப் பேர் ஏழ்மையடைந்துள்ளனர். இந்நிலைமையால் குடும்ப அலகுகளின் வருமானம் வேகமாக வீழ்ச்சியடைந்துள்ளது.
இதனால், பச்சிளம் குழந்தைகள், கர்ப்பிணிகள், தாய்மார்கள், சிறுவர்கள், 41 இலட்சம் பாடசாலை மாணவர்கள், இளைஞர்களிடையேயும் ஊட்டச்சத்து குறைபாடு அதிகரித்துள்ளது.
இதனைக் கட்டுப்படுத்த சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்பு அவசியம் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ இங்கு சுட்டிக்காட்டினார்.
தற்போதுள்ள வறுமை ஒழிப்பு சமூக பாதுகாப்புத் திட்டங்கள் இதற்குப் போதுமானதாக இல்லை. ஜனசவிய வேலைத்திட்டத்தின் மாதிரியான புதிய சமூக பாதுகாப்புத் வேலைத்திட்டமொன்று தேவைப்படுகின்றது.
முதலீடு மற்றும் சேமிப்பு
நுகர்வு, முதலீடு மற்றும் சேமிப்பு போன்ற பகுதிகளும் உள்ளடக்கப்பட வேண்டும்.
நாட்டின் பொருளாதார நெருக்கடியை சர்வதேச நாணய நிதியத்தின் பங்களிப்புடன் எதிர்கொள்ள வேண்டும் என்ற தங்கள் முன்மொழிவுக்கு, முன்னதாகவே அரசு பதிலளித்திருந்தால் தற்போதைய நிலைமை உருவாகியிருக்காது.
எதிர்க்கட்சி பிரதிநிதிகள் இங்கு சுட்டிக்காட்டினர். இலங்கையின் பொருளாதார நெருக்கடியைத் தீர்ப்பதற்காக சர்வதேச நாணய நிதியம் முன்வைத்துள்ள பாதை வரைபடம் மற்றும் இலக்குகளை ஐக்கிய மக்கள் சக்தி சாதகமாக ஏற்றுக்கொண்டாலும் சில முன்மொழிவுகளை நடைமுறைப்படுத்துவதில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் இங்கு சுட்டிக்காட்டப்பட்டது” என்றார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |