நிதி உத்தரவாதங்களைப் பெற இலங்கையின் நடவடிக்கை! சர்வதேச நாணய நிதியம்
நிதி உத்தரவாதங்களைப் பெறுவதற்கு இலங்கை அதன் உத்தியோகபூர்வ இருதரப்பு கடன் வழங்குநர்களுடன் இன்னும் பேச்சுவார்த்தைகளை நடத்தி வருவதாக சர்வதேச நாணய நிதியம் குறிப்பிட்டுள்ளது.
நாணய நிதியத்தின் பொருளாதார ஆலோசகரும் ஆராய்ச்சி இயக்குநருமான ப்யர்ஸ் ஒலிவர் கௌரிஞ்சர்ஸ் இதனை தெரிவித்துள்ளார்.
இந்த உத்தரவாதங்கள் கிடைத்தவுடன் சர்வதேச நாணய நிதியத்தின் நிதியுதவிக்கான அணுகல் திறக்கப்படும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டுள்ள இந்தியாவின் அறிவிப்பு
நாடு அதன் கடன் நிலைத்தன்மையை மீட்டெடுக்க உதவுவதுடன், நிதியுதவி மற்றும் கடன் நிவாரணத்தை வழங்க உறுதிபூண்டுள்ளதாக ஏற்கனவே இந்தியா அறிவித்துள்ளமையை அவர் மீணடும் உறுதிப்படுத்தியுள்ளார்.
இதேபோன்ற உறுதிமொழிகளைப் பெறுவதற்கு மற்ற உத்தியோகபூர்வ இருதரப்பு கடன்
வழங்குநர்களுடன் இலங்கை கலந்துரையாடல்களில் ஈடுபட்டுள்ளது என்றும் அவர்
குறிப்பிட்டுள்ளார்.

பாக்கியலட்சுமி சீரியல் நடிகையின் மருமகளுக்கு குழந்தை பிறந்தது.. நடிகை வெளியிட்ட மகிழ்ச்சியான வீடியோ Cineulagam

எங்கள் நாட்டில் உன்னை பணக்காரர் ஆக விடமாட்டேன்: புலம்பெயர்ந்தோர் ஒருவர் ஜேர்மனியில் சந்தித்த அதிர்ச்சி News Lankasri
