சர்வதேச நாணய நிதியக்கடன் சாதாரண மக்களை மேலும் நெருக்கடிக்குள் தள்ளும்: சபா குகதாஸ்
கடன் கிடைப்பதை மிக சந்தோஷமாக வரவேற்கும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சாதாரண
மக்களின் வாழ்வாதாரத்தில் ஏற்படப்போகும் நெருக்கடிகள் தொடர்பில்
கவலைப்படவில்லை என வடக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர் சபா குகதாஸ் தெரிவித்துள்ளார்.
அவர் இன்றைய தினம் (14.12.2023) வெளியிட்ட ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
நாடு மீண்டெழ வேண்டுமாக இருந்தால் குறிக்கப்பட்ட காலம் மக்கள் நெருக்கடிகளை சகித்துக்கொள்ள வேண்டுமென, ஊழல் செய்த அரசியல்வாதிகளை காப்பாற்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, சாதாரண மக்களிடம் கோரியுள்ளார்.
நாட்டு மக்களின் வாழ்வாதாரம்
வற் வரி அதிகரிப்பு ஜனவரியில் இருந்து நடைமுறைக்கு வரும் போது, எரிபொருட்களின் விலை அதிகரிப்பு அத்தியாவசியப் பொருட்களின் விலைகளில் மேலும் அதிகரிப்பை ஏற்படுத்தும். இதனால் மத்திய, சாதாரண மக்கள் அன்றாடம் வாழ்க்கைப் போராட்டத்தை எதிர்நோக்கும் நிலைமை ஏற்படும்.

மேலும், சர்வதேச நாணய நிதியத்தின் கடன்கள் தொடர்ந்து கிடைப்பதற்காக, நாட்டின் வரிகளை அதிகரிப்பதற்கும் பல திணைக்களங்கள் தனியார் மயப்படுத்தப்படுவதற்கும் வாய்ப்புக்கள் அதிகமாக உள்ளன. இவை யாவும் நாட்டின் பெரும்பான்மையாக உள்ள சாதாரண மக்களின் வாழ்வாதாரத்தை பாரிய நெருக்கடிக்குள் தள்ளவுள்ளது.
அதுமட்டுமன்றி, நாட்டின் கடன் மறுசீரமைப்பு செய்யப்படாததோடு உள்நாட்டு உற்பத்திகளும் அதிகரிக்கப்படாது உள்ளது.
ஊழல்வாதிகளை கண்டறிந்து சூறையாடப்பட்ட பணத்தை நாட்டின் திறைசேரிக்கு கொண்டு வராமல் மேலும் கடன்களை அதிகரித்தல் நாட்டு மக்களின் வாழ்வாதாரத்தை பாரிய பாதக நிலைமைக்குள் தள்ளும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
சீரியல் நடிகர் வெற்றி வசந்த், வைஷு வீட்டில் ஏற்பட்ட உயிரிழப்பு... சோகத்தில் குடும்பம், பிரபலம் பதிவு Cineulagam
Bigg Boss: கொடுத்த வேலையை பார்க்க வக்கில்ல.... நான் உங்ககிட்ட பேசலை! திவ்யாவை கிளித்தெடுத்த விஜய்சேதுபதி Manithan