இலங்கையின் பாதை கத்தி முனையில் உள்ளது : சர்வதேச நாணய நிதியம் எச்சரிக்கை
இலங்கை, அதன் வரலாற்றில் ஏற்பட்ட மிக மோசமான நெருக்கடிகளில் இருந்து மீள்வதற்காக, தமது நிதிய வேலைத்திட்டத்தின் நோக்கங்களின் அடைவுக்கு முக்கிய முன்னுரிமை வழங்கவேண்டும் என்று சரவ்தேச நாணய நிதியம் கேட்டுள்ளது.
சர்வதேச நாணய நிதியத்தின் பேச்சாளரின் அறிக்கையில் இது வலியுறுத்தப்பட்டுள்ளது.
இலங்கையை பாதுகாக்கும்
இந்தநிலையில் இலங்கையின் பாதை கத்தி முனையில் உள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இலங்கை மீட்சி பெறுவதில் நல்ல முன்னேற்றம் கண்டுள்ளது, மேலும் இந்த கடின வெற்றிகளைப் பாதுகாப்பதும் முக்கியமாகும்.
அத்துடன், நிலையான பொருளாதார வளர்ச்சியை செயல்படுத்தும் சீர்திருத்தங்களை நிலைநிறுத்துவதற்கு எதிர்காலத்தில் முக்கிய முன்னுரிமையை வழங்கவேண்டும்.
இதுவே மற்றொரு நெருக்கடியில் இருந்து இலங்கையை பாதுகாக்கும் என்று பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்
சர்வதேச நாணய நிதியத்தின் மாற்று முன்மொழிவுகளைக் கேட்க இலங்கை தயாராக உள்ளது
இந்தநிலையில் திட்டத்தின் நோக்கங்களை காலக்கெடுவுக்குள் அடையக்கூடியதாகவும் இருக்க வேண்டும் என்றும் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |