வவுனியா சிறைச்சாலை இரண்டு வாரங்களுக்கு முடக்கம்: வெளியான காரணம்
வவுனியா சிறைச்சாலையில் உள்ள கைதிகளுக்குச் சின்னம்மை நோய் ஏற்பட்டுள்ளமையால் சிறைச்சாலை 14 நாட்களுக்கு முடக்கப்பட்டுள்ளதுடன், கைதிகளை உறவினர்கள் பார்வையிடுவதும் இடைநிறுத்தப்பட்டுள்ளது.
கடந்தவாரம் வவுனியா விளக்கமறியல் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ள கைதிகள் சிலருக்குச் சின்னம்மை நோய் ஏற்பட்டுள்ளமை கண்டறியப்பட்டது.
இதனையடுத்து சிறைச்சாலை வளாகம் 14 நாட்களுக்கு முடக்கப்பட்டுள்ளதுடன், கைதிகளை அவர்களது உறவினர்கள் பார்வையிடுவதற்கான செயற்பாடும் இடைநிறுத்தப்பட்டுள்ளது.

இடவசதி பற்றாக்குறை
இதேவேளை நோய் பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்குடன் வவுனியா சுகாதார வைத்திய அதிகாரி பனிமனையினால் அனைத்து கைதிகளுக்கும் தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அத்துடன் விளக்கமறியலில் உள்ள கைதிகளின் நீதிமன்ற தவணைகளுக்கு புதிய திகதிகள் வழங்கப்பட்டுள்ளதுடன், சில வழக்குகள் நிகழ்நிலை தொழில்நுட்ப உதவியுடன் இடம்பெற்று வருகின்றது.
இதேவேளை வவுனியா சிறைச்சாலையில் இடவசதி பற்றாக்குறை நீண்டகாலமாக உள்ளதுடன் அளவுக்கதிகமான கைதிகள் அங்குத் தங்க வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
முன்பதிவிலேயே விஜய்யின் ஜனநாயகன் பட கலெக்ஷனை தோற்கடித்த ரஜினியின் ஜெயிலர் 2... மாஸ் கலெக்ஷன்.. Cineulagam
மனைவியுடன் சண்டையை தவிர்க்க 21 வது மாடியின் பால்கனியில் இருந்து இறங்கிய கணவன்: காத்திருந்த சோகம் News Lankasri
Bigg Boss 10: மக்களின் சுவாரசியத்திற்காக முனியம்மாவின் விபரீத செயல்... அச்சச்சோ இப்படி மாட்டிக்கிட்டாரே? Manithan