சட்டவிரோதமாக இறைச்சி கூடத்தில் வேலைக்கு அனுப்பட்ட இலங்கை மாணவர்கள்! தாய்வானில் பலர் கைது
தாய்வானில் உள்ள ஒரு பல்கலைக்கழகத்தின் முன்னாள் அதிபர் உட்பட்ட சிலர் மீது மோசடி குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.
இலங்கை உள்ளிட்ட நாடுகளில் இருந்து கற்கை நெறிகளுக்காக வரவழைக்கப்படுவோர் தாய்வானில் கல்வி கற்றப்பின்னர் இறைச்சிக் கூடத்தில் சட்டவிரோதமாக வேலைக்கு அனுப்பி வைக்கப்படுவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
குற்றம் சுமத்தப்பட்டவர்களில் பல்கலைக்கழகத்தின் முன்னாள் அதிபர், இரண்டு பல்கலைக்கழக ஊழியர்கள் மற்றும் மூன்று ஆட்சேர்ப்பு முகவர்கள் உள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான விசாரணையில், மூன்று முகவர்களும் 2017 ஆம் ஆண்டில் இலங்கைக்கு வந்து ஒரு ஆட்சேர்ப்பு நிகழ்வை நடத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதன்போது தாய்வானின் பல்கலைக்கழகத்தில் இலவசமாக கற்க வரலாம் என்றும், பல்கலைக்கழகத்தின் மூலம் அவர்களுக்கு வேலை வாய்ப்புகளை வழங்குவதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.
இதனையடுத்து 2017 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் இலங்கையர்கள் தாய்வானுக்கு வந்தனர். எனினும் அவர்களில் 50 பேர் கற்கைக்கு பின்னர் வாரத்திற்கு 40 மணி நேரம் ஒரு இறைச்சிக் கூடத்தில் வேலைக்கு அனுப்பப்பட்டனர்.
அவர்கள் பல்கலைக்கழகத்தின் வளாகத்தில் வாரத்தில் இரண்டு நாட்கள் மட்டுமே வகுப்புகளில் கலந்து கொண்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.





தமிழ் இன அழிப்பை கட்டமைத்துள்ள இலங்கை அரசாங்கம் 2 மணி நேரம் முன்

சிவன் ஆலயத்திற்காக மோதும் நாடுகள்! மூன்றாம் உலகப்போரின் தொடக்கமா? ஓடித்திரியும் ட்ரம்ப் News Lankasri
