சட்டவிரோத நடவடிக்கையில் ஈடுபட்டவர்கள் கைது
பூநகரி - குடமுருட்டி ஆற்றுப்பகுதியில் மணல் அகழ்வில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குடமுருட்டி ஆற்றுப் பகுதி மணல் அகழ்வுக்கு தடை செய்யப்பட்ட பகுதியாக கடந்த மாதம் கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் குறித்த பகுதியில் அனுமதி பத்திரம் இன்றி சட்டவிரோதமான முறையில் இன்று நான்கு டிப்பர்கள் மணல் அகழ்வில் ஈடுபடுவதாக வழங்கப்பட்ட தகவலுக்கு அமைவாக நான்கு டிப்பர்களுடன் அதன் சாரதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்ட சந்தேகநபர்கள்
இதேவேளை ஜெயபுரம் பகுதியில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி கொண்டு செல்ல முற்பட்ட பாலை மர குற்றிகளுடன் பயணித்த கப்ரக வாகனமும் பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
இதனை தொடர்ந்து சந்தேக நபர்கள் பறிமுதல் செய்யப்பட்ட கப்ரக வாகனம் மற்றும் நான்கு டிப்பர்கள் என்பவற்றுடன் பூநகரி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
சிறியவர்கள் முதல் பெரியோர் வரை ஆடைகளின்றி அடித்து கொலை செய்யப்பட்ட துயரம்! சபையில் நீண்ட வெளிப்படுத்தல்


பிரித்தானிய கடற்பரப்பிற்குள் நுழைந்த ரஷ்ய உளவு கப்பல்: நிலைநிறுத்தப்படும் பிரிட்டிஷ் படைகள் News Lankasri
மகேஷ் பாபுவின் வாரணாசி பட நிகழ்ச்சியில் பாட ஸ்ருதிஹாசன் வாங்கிய சம்பளம்... இத்தனை கோடியா? Cineulagam