திருகோணமலை கடற்கரையில் சட்டவிரோத உணவகக் கட்டுமானம் அகற்றும் நடவடிக்கை தோல்வியில்..

Trincomalee Crime
By Kiyas Shafe Nov 04, 2025 02:20 PM GMT
Report

​திருகோணமலை, பிரட்ரிக் கோட்டையில் உள்ள டச்பே கடற்கரையோரமாக அமைந்திருந்த சட்டவிரோத உணவகக் கட்டிடம் மற்றும் கூடுதல் கட்டுமானங்களை அகற்றுவதற்காக இன்று (நவம்பர் 04) கரையோர பாதுகாப்பு மற்றும் கரையோர வளங்கள் முகாமைத்துவ திணைக்கள அதிகாரிகளினால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை தற்காலிகமாக தோல்வியில் முடிவடைந்துள்ளது.

விகாரை நிர்வாகத்தின் கோரிக்கையினால், மீதமுள்ள கட்டுமானங்களை அகற்றும் நடவடிக்கை ஒரு வார காலத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ​

பிரட்ரிக் கோட்டை வீதியில் அமைந்துள்ள ஸ்ரீ சம்புத்த ஜயந்தி போதி ராஜ விஹாரயா வளாகத்திற்குள், அனுமதி பெறாமல் சட்டவிரோதமாகக் கட்டப்பட்டிருந்த இந்த உணவகக் கட்டிடம் மற்றும் மூன்று கொட்டில்களை அகற்றுவதற்காக இயந்திரங்கள் வரவழைக்கப்பட்டு, பாதுகாப்புக்காக பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப்படையினரும் கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். ​

எனினும், குறித்த விகாரையின் விகாராதிபதி, உடைக்கும் நடவடிக்கைக்கு எதிராக துறைமுக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றை மேற்கொண்டதுடன், நடவடிக்கைக்காக கால அவகாசமும் கோரியிருந்தார்.

முல்லைத்தீவு முள்ளியவளை முகாமில் இராணுவ வீரர் பலி! மூவர் வைத்தியசாலையில்

முல்லைத்தீவு முள்ளியவளை முகாமில் இராணுவ வீரர் பலி! மூவர் வைத்தியசாலையில்

கால அவகாசம் 

அத்துடன், குறித்த சட்டவிரோத கட்டுமானம் தொடர்பிலான வழக்கு ஒன்று ஏற்கனவே மாநகரசபையினால் தொடரப்பட்டுள்ள நிலையில், அதன் தீர்ப்பு இதுவரை கிடைக்கப்பெறாத நிலையிலும் இந்த அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

திருகோணமலை கடற்கரையில் சட்டவிரோத உணவகக் கட்டுமானம் அகற்றும் நடவடிக்கை தோல்வியில்.. | Illegal Restaurant Construction Removed Trinco

​இதனைத் தொடர்ந்து, குறித்த சட்டவிரோத கட்டுமானத்தில் இருந்த மூன்று கொட்டில்கள் மட்டுமே இன்று அகற்றப்பட்ட நிலையில், நிரந்தரக் கட்டிடத்தை அகற்றும் நடவடிக்கை ஒரு வார காலத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ​

கரையோர பாதுகாப்புத் திணைக்களம் வழங்கிய தகவலின்படி, ஆரம்பத்தில் 127 சதுர அடியில் தற்காலிகக் கடை ஒன்றை அமைப்பதற்கு மட்டுமே உரிமையாளருக்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது.

திருகோணமலை கடற்கரையில் சட்டவிரோத உணவகக் கட்டுமானம் அகற்றும் நடவடிக்கை தோல்வியில்.. | Illegal Restaurant Construction Removed Trinco

ஆனால், அந்த அனுமதியைப் பயன்படுத்தி, 405 சதுரஅடி பரப்பளவு கொண்ட நிரந்தரக் கட்டிடம், மூன்று கூடுதல் கொட்டில்கள் மற்றும் நிரந்தர வேலி ஆகியவை அனுமதி பெறாமல் கட்டப்பட்டிருந்தது கண்டறியப்பட்டது. ​இந்த சட்டவிரோத கட்டுமானங்களை அகற்றுமாறு ஏற்கனவே உரிய முறையில் அறிவித்தல் கொடுக்கப்பட்டிருந்தது.

அத்துடன், ஆணையாளர் நாயகத்தினால் ஒப்பமிடப்பட்ட உடைத்தல் கட்டளையானது 12.08.2025 அன்று ஒட்டப்பட்டிருந்தது. அந்தக் கட்டளையில், அறிவித்தல் ஒட்டப்பட்ட நாளில் இருந்து 14 நாட்களுக்குள் உரிமையாளர்கள் தாமாகவே அகற்ற வேண்டும் எனவும், தவறும் பட்சத்தில் திணைக்களம் அவற்றை உடைத்து அகற்றும் எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. 

வாகன விலைகளில் ஏற்படப் போகும் பாரிய மாற்றம்

வாகன விலைகளில் ஏற்படப் போகும் பாரிய மாற்றம்

வடக்கு மண்ணில் குற்றச்செயல்களில் ஈடுபடும் தரப்புகளை துடைத்தெறிவோம்: அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்

வடக்கு மண்ணில் குற்றச்செயல்களில் ஈடுபடும் தரப்புகளை துடைத்தெறிவோம்: அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்

  நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 
GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 4ம் வட்டாரம், பரிஸ், France, சூரிச், Switzerland

10 Apr, 2022
8ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Bondy, France

27 Mar, 2018
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

பதுளை, புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Paris, France

28 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை கிழக்கு, கந்தர்மடம், யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அல்லாரை, முரசுமோட்டை

24 Mar, 2026
மரண அறிவித்தல்

சங்கானை, Mississauga, Canada

22 Mar, 2026
மரண அறிவித்தல்

வவுனியா, Versailles, France

24 Mar, 2026
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Hamburg, Germany, Wenden, Germany

24 Mar, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஏழாலை கிழக்கு, யாழ்ப்பாணம், Baden, Switzerland

20 Mar, 2026
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026
மரண அறிவித்தல்

காங்கேசன்துறை, Pforzheim, Germany

21 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் மேற்கு, Muscat, Oman, Toronto, Canada

05 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி, Winterthur, Switzerland

25 Mar, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொக்குவில், மட்டக்களப்பு, அண்ணா நகர், India, London, United Kingdom

27 Mar, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, நல்லூர், அரியாலை

26 Mar, 2019
15ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்கொழும்பு, இளவாலை, ஜேர்மனி, Germany

25 Mar, 2011
8ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம், Bondy, France

28 Mar, 2018
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், Neuilly-sur-Marne, France

18 Mar, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சொலோதென், Switzerland

25 Mar, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

05 Apr, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சுதந்திரபுரம்

27 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, பாண்டியன்தாழ்வு

26 Mar, 2017
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், London, United Kingdom

17 Mar, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 6 ஆம் வட்டாரம், கொழும்பு, India

24 Mar, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், பேர்லின், Germany

04 Apr, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை கிழக்கு, யாழ்ப்பாணம், Asnæs, Denmark

26 Mar, 2023
மரண அறிவித்தல்

கரம்பொன் மேற்கு, Milton, Canada

22 Mar, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, வேலணை புளியங்கூடல், London, United Kingdom

20 Mar, 2026
மரண அறிவித்தல்

நீர்வேலி வடக்கு, சூரிச், Switzerland

19 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புளியங்கூடல், Mississauga, Canada

24 Mar, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Scarborough, Canada

20 Mar, 2026
மரண அறிவித்தல்

ஆனைக்கோட்டை, யாழ்ப்பாணம், தெல்லிப்பழை வீமன்காமம், வவுனியா, கொழும்பு, Toronto, Canada, Ottawa, Canada

19 Mar, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், வண்ணார்பண்ணை

23 Mar, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US