வாகன விலைகளில் ஏற்படப் போகும் பாரிய மாற்றம்
2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் வாகனங்களுக்கான வரி அதிகரிக்கப்பட வாய்ப்புள்ளதாக இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் உப தலைவர் அரோஷ ரொட்ரிகோ தெரிவித்துள்ளார்.
வரவு செலவுத் திட்டத்தில் ஒவ்வொரு துறையிலும் ஏற்படப்போகும் மாற்றங்கள் தொடர்பில் ஊடகங்கள் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். அது தொடர்பில் மேலும் உரையாற்றிய அவர்,
அதிகரிக்கும் விலை
வாகன இறக்குமதிக்கான வரி கட்டமைப்பை மாற்றப்போவதாக தெரியவந்துள்ளது. வாகன இறக்குமதியாளர்களாக நாம் முக்கியமாக கேட்க வேண்டிய விடயம் என்னவென்றால், வாகன இறக்குமதிக்கான வரி அதிகரிக்கப்பட்டால் வாகனங்களின் விலை மேலும் அதிகரிக்க கூடும்.

அவ்வாறு வரி அதிகரிக்கப்பட்டால் சிறிய எல்டோ வாகனத்தில் இருந்து அனைத்தின் விலையும் அதிக்கும். குறிப்பாக நுற்றுக்கு 15 வீதத்திலிருந்து 25 வீதம் வரை அதிகரிக்க கூடும். அப்போது வாகன கொள்வனவு குறைவடைந்து, எமது தொழில் பெரு பாதிப்படைய கூடும் என்றார்.
இன்னும் திருந்தாத மயிலின் அப்பா, இப்போது செய்த காரியம், வெடிக்கப்போகும் பிரச்சனை... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam
Bigg Boss: ரெட் கார்டு பெற்றும் வெளியேற மறுத்த போட்டியாளர்... மண்டியிட்டு மன்னிப்பு கேட்ட தருணம் Manithan
ஜனனியிடம் வீடியோ இல்லாத விஷயத்தை தெரிந்துகொண்ட கரிகாலன், பரபரப்பான எபிசோட்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam