யாழில் முற்றுகையிடப்பட்ட கசிப்பு உற்பத்தி நிலையம்
யாழ்ப்பாணம் பொலிஸ் நிலைய குற்ற விசாரணை பிரிவு மற்றும் போதை தடுப்பு பொலிஸார் இணைந்து மேற்கொண்ட நடவடிக்கையில், பாரியளவில் கசிப்பு உற்பத்தி நடவடிக்கையில் ஈடுபட்ட இடம் ஒன்று முற்றுகையிடப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் அத்தியூஸ் வீதியில் உள்ள வீடு ஒன்றில் தொடர்ச்சியாக கசிப்பு உற்பத்தி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக கிடைத்த தகவலுக்கமைய இந்த சுற்றி வளைப்பு நடவடிக்கை நேற்று(15.03.2025) மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன்போது, 20 லிட்டர் கசிப்பு ஆறுபிறல் கோடா என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.
சந்தேகநபர் கைது
அத்துடன், குறித்த கசிப்பு உற்பத்தி நிலையத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதனையடுத்து, கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடம் இருந்து கசிப்பு உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் உபகரணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |




நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 18
காணாமல் ஆக்கப்பட்டோருக்கான தினமும் அநுர அரசாங்கத்தின் நிலைப்பாடும்..! 21 மணி நேரம் முன்
ஜெயிலர் 2 ரிலீஸ் தள்ளிப்போகிறதா? சன் பிக்சர்ஸ் வெளியிட்ட அறிவிப்பு.. சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி Cineulagam