இரகசிய விசாரணையில் அதிரடியாக முற்றுகையிடப்பட்ட சட்டவிரோத மதுபான உற்பத்தி நிலையம்
குளியாப்பிட்டிய அருகே நீண்டகாலமாக இயங்கி வந்த சட்டவிரோத மதுபான உற்பத்தி நிலையம் ஒன்று பொலிஸாரினால் முற்றுகையிடப்பட்டுள்ளது.
குளியாப்பிட்டிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கீழ் தியதொர, மாதரவத்த பிரதேசத்தில், இயங்கிவந்த சட்டவிரோத மதுபான உற்பத்தி நிலையம் ஒன்றே இவ்வாறு முற்றுகையிடப்பட்டுள்ளது.
சந்தேகநபர் கைது
இதன்போது, அங்கு சட்டவிரோத மதுபான உற்பத்தியில் ஈடுபட்டிருந்த சந்தேகநபர் ஒருவரையும் கைது செய்துள்ளதாக, வலான ஊழல் தடுப்புப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
வலான ஊழல் தடுப்புப் பிரிவின் பொறுப்பதிகாரிக்குக் கிடைத்த தகவலுக்கு அமைய, மேற்கொள்ளப்பட்ட இரகசிய விசாரணையைத் தொடர்ந்து, நேற்று (31) விசேட பொலிஸ் குழுவினால் இந்த முற்றுகை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதன்போது, சட்டவிரோத மதுபான காய்ச்சுவதற்குப் பயன்படுத்தப்படும் 7,560,000 மில்லி லீட்டர் கோடா அடங்கிய 40 பீப்பாய்கள், 187,500 மில்லி லீட்டர் கள்ளச் சாராயம் அடங்கிய 250 போத்தல்கள், 07 சுருள்களைக் கொண்ட 02 செப்புச் சுருள்கள், 02 எரிவாயு அடுப்புகள் மற்றும் 12.5 கிலோகிராம் கொண்ட 04 எரிவாயு சிலிண்டர்கள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காகக் குளியாப்பிட்டிய பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
மேலதிக விசாரணைகளை குளியாப்பிட்டிய பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.
நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 15