கோவில் திருவிழாக்களில் கவர்ச்சி நடனங்களை நடாத்துவது சில புலம்பெயர் மக்களின் சதி!
தமிழர் பகுதியில் நடைபெற்றிருந்த திருவிழா ஒன்றில் இந்தியாவிலிருந்து நடனக்கலைஞர்கள் அழைத்துவரப்பட்டு சில கவர்ச்சி நடனங்கள் இடம்பெற்றிருந்தமை சமூக வலைக்களங்களில் காணக்கூடியதாக இருந்தது .
இந்த விடயம் தொடர்பில் எமது தலைமுறை கட்சியின் தலைவர் சிதம்பரம் கருணாநிதி லங்காசிறியின் நேருக்கு நேர் நேர்காணல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையில், இது புலம்பெயர் தமிழர்கள் செய்யும் ஒருவகையான சதியாகும் என குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், ஒரு காலத்தில் வேங்கைகளால் வளர்க்கப்பட்ட மந்தைகள் தற்பொழுது நரிகளாலும் குள்ளநரிகளாலும் வளர்க்கப்படுகின்றனர். இவ்வாறானவர்களால் இந்த சமூகம் சீர்குழைக்கப்படுகிறது.
இது தொடர்பில் மக்கள் மிகவும் நிதானமாக செயற்பட வேண்டும். இவ்வாறானவர்கள் கண்டிப்பாக தண்டிக்கப்பட வேண்டும் என்பதுடன் குறித்த கோயில் நிர்வாகத்தினர் உடனடியாக நீக்கப்பட வேண்டும்.
கோயில்களிலும் தேவாலயங்களிலும் இவ்வாறான விடயங்கள் நடைபெறுவது என்பது பிழையான ஒரு விடயமாகும் என குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து மேலதிக தகவல்களை நேருக்கு நேர் நேர்காணல் நிகழ்ச்சியின் ஊடாக விரிவாகப் பார்ப்போம்..