யாழில் நீண்ட காலமாக சட்டவிரோத மதுபான உற்பத்தியில் ஈடுபட்ட சந்தேகநபர் கைது!
நீண்டகாலமாக வீட்டில் சட்டவிரோத மதுபான உற்பத்தி மற்றும் விற்பனையில் ஈடுபட்டு வந்த சந்தேகநபர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கோப்பாய் - ஊரெழு பகுதியில் 40 லீட்டர் சட்டவிரோத மதுபானதுடன் கைது செய்யப்பட்ட சந்தேகநபரின் வாக்குமூலங்களுக்கு அமைவாக சுதுமலை பகுதியைச் சேர்ந்த குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
வாக்குமூலம்
மானிப்பாய் - சுதுமலை பிரதேசத்தில் நீண்ட நாட்களாக வீட்டின் சமையல் அறையில் சட்டவிரோத மதுபானம் உற்பத்தி செய்து வந்த 36 வயதுடையே ஆணொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

கோப்பாய் பொலிஸாரும் கோப்பாய் விசேட பொலிஸ் புலனாய்வு பிரிவினரும் இணைந்து இந்த நபரை கைது செய்துள்ளனர்.
கைது
இதன்போது 600 லீட்டர் கோடா, 60 லீட்டர் சட்டவிரோத மதுபானம், உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் உபகரணங்கள் மற்றும் காஸ் சிலிண்டர் என்பன கோபாய் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

குற்றப்பிரதேசமானது மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதி என்பதால், சந்தேகநபர் சான்றுப் பொருட்களுடன் மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.



சரிகமப லிட்டில் சேம்ப்ஸ் சீசன் 5 போட்டியாளர் மித்ரா அம்மா-அப்பாவிற்கு கிடைத்த பெரிய உதவி... Cineulagam
கிரீன்லாந்து விவகாரம்... ட்ரம்பின் இரண்டு அதிரடி அறிவிப்புகள்: குதிக்கும் பங்குச் சந்தை News Lankasri
பாரிஸ் அவசரக் கூட்டத்தில் பங்கேற்க மறுத்த ட்ரம்ப் - கிரீன்லாந்து விவகாரம் மீதான சர்ச்சை தீவிரம் News Lankasri