மட்டக்களப்பில் சட்டவிரோத காணி அபகரிப்பு
மட்டக்களப்பு (batticaloa) - வாகனேரி கிராம உத்தியோகத்தர் பிரிவிற்குட்பட்ட படுகாடு கண்டத்தில் சட்டவிரோத காணி அபகரிப்பில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
இரண்டு நாட்களாக வனவள திணைக்களத்திற்கு சொந்தமான வனப்பகுதியில் அடையாளம் தெரியாத சிலர் கனரக வாகனத்தில் உதவியுடன் துப்பரவு பணியில் ஈடுபடுவதாக மாவட்ட செயலகத்திற்கு முறைப்பாடொன்று கிடைக்கப்பெற்றுள்ளது.
சட்ட நடவடிக்கை
இதனைதொடர்ந்து விரைந்து செயற்பாட்டினை மேற்கொண்ட மாவட்ட செயலக மற்றும் கிரான் பிரதேச செயலக குழுவினரும் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜஸ்டினா முரளிதரனின் ஆலோசனைக்கு அமைய மேலதிக அரசாங்க அதிபர் சுதர்சனி ஶ்ரீகாந்தின் வழிகாட்டலில் குறித்த இடத்தினை முற்றுகையிட்டுள்ளனர்.
மேலும், கனரக வாகனத்தை கைப்பற்றியதுடன், சட்ட நடவடிக்கைக்காக வாகனத்தை பொலிஸாரிடம் கையளிக்கவுள்ளதுடன், குறித்த நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கையினையும் மேற்கொள்ளவுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |