கட்டுநாயக்க விமான நிலையத்தில் வெளிநாட்டுப் பிரஜை கைது
கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து சட்டவிரோதமான முறையில் இரண்டு தங்க நெக்லஸ்களை எடுத்துச்செல்ல முயன்ற இந்திய பிரஜை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் சந்தேகநபர் இன்று (09) கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
சுமார் ஒரு கோடியே நாற்பது இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு தங்க நெக்லஸ்களை செல்லோ டேப்பைப் பயன்படுத்தி கொண்டு செல்லமுற்பட்ட போது கைது செய்யப்பட்டுள்ளார்.
தாயகத்திற்காக விதைக்கப்பட்ட கணவனின் உயிர்! அரபு நாடு கொடுத்த துயரம் - நடமாடும் இறுதி யுத்த சாட்சியம்

நகைகள் மற்றும் தொலைபேசி உதிரி பாகங்கள் விற்பனை
இவர் தமிழ்நாட்டின் திருச்சியில் வசிக்கும் 36 வயதான தொழிலதிபர் எனவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

நகைகள் மற்றும் தொலைபேசி உதிரி பாகங்களை விமானம் மூலம் இலங்கைக்கு கொண்டு வந்து விற்பனை செய்யும் தொழிலிலும் இவர் ஈடுபட்டு வந்துள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இவர் குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகளிடம் சிக்கிய போது தனது பொதிகளை வைத்து விமான நிலையத்தில் விட்டுவிட்டு வெளியேற முயன்ற போது கைது செய்யப்பட்டுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
இந்துமாகடல் அரசியலில் தமிழர் வகிபாகம் என்ன..! 2 நாட்கள் முன்
2007ஆம் ஆண்டு தீபாவளிக்கு வெளிவந்த அழகிய தமிழ் மகன், வேல், பொல்லாதவன் படங்கள்.. பாக்ஸ் ஆபிஸ் வசூல் எவ்வளவு தெரியுமா? Cineulagam
க்ரிஷுடன் அமர்ந்து ரோஹினி திதி கொடுப்பதை நேரில் பார்த்த மீனா, அடுத்த நொடியே செய்த காரியம்.. சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam