நுவரெலியாவில் இயங்கி வந்த சட்டவிரோத விடுதி சுற்றிவளைப்பு
நுவரெலியா (Nuwara Eliya) கண்டி பிரதான வீதியில் பம்பரகலை பகுதியில் மசாஜ் நிலையம் என்ற போர்வையில் இயங்கி வந்த விடுதி ஒன்று பொலிஸாரால் சுற்றிவளைக்கப்பட்டுள்ளது.
குறித்த சற்றிவளைப்பு நடவடிக்கையானது நேற்று (11) முன்னெடுக்கப்பட்டதுடன், அங்கிருந்த நான்கு பெண்களும் இரண்டு ஆண்களும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலதிக விசாரணை
நுவரெலியா பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலை அடுத்து இந்த சுற்றிவளைப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
காணொளி - திவா
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் 21 முதல் 35 இற்கும் வயதுக்கிடைப்பட்டவர்கள் எனவும் இவர்கள் வெலிமடை, இரத்தினபுரி. கொழும்பு ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் எனவும் தெரியவந்துள்ளது.

இவ்வாறு கைது செய்யப்பட்ட 6 சந்தேகநபர்களும் தடுத்து வைக்கப்பட்டு தனித்தனியாக விசாரணைகளை மேற்கொண்டதன் பின்னர் நுவரெலியா மாவட்ட நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை நுவரெலியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
தரையில் தூக்கம், 20 பேருக்கு 4 கழிப்பறை: போராட்டத்தில் உருவான இந்திய மகளிர் கிரிக்கெட் News Lankasri
தமிழ் சினிமாவில் பிரியங்கா தேஷ்பாண்டே பாடியுள்ள ஒரே ஒரு பாடல், சூப்பர் ஹிட் தான்... என்ன பாடல் தெரியுமா? Cineulagam
மேக் 5 வேகத்தில் வடிவத்தை மாறும் ஹைப்பர்சோனிக் ஏவுகணை - சாத்தியமற்றதை சாத்தியமாக்கும் சீனா News Lankasri