யாழில் அரச உத்தியோகஸ்தர்களுக்கான எரிவாயு விநியோகம்: மாவட்ட செயலர் வெளியிட்ட தகவல் (Photo)

Jaffna Economy of Sri Lanka Sri Lanka Fuel Crisis
By Theepan Aug 10, 2022 01:07 PM GMT
Report

யாழ்ப்பாணத்தில் அரச உத்தியோகஸ்தர்களுக்கான எரிவாயு விநியோகத்திற்கும் மாவட்ட செயலகத்திற்கு தொடர்பு இல்லை என மாவட்ட செயலர் க.மகேசன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்திற்கு எடுத்து வரப்பட்ட 1650 எரிவாயு கொள்கலன்களில் 1000 கொள்கலன்களை யாழ்.மாவட்ட செயலகம் உள்ளிட்ட 21 திணைக்களங்களில் பணியாற்றும் பணியாளர்களுக்கு விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும், மிகுதி 650 கொள்கலன்களையே யாழ்ப்பாணம் பிரதேச செயலகம் ஊடாக பொதுமக்களுக்கு பகிர்ந்தளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்விடயம் பலர் மத்தியில் விசனத்தினை ஏற்படுத்திய நிலையில் இது தொடர்பில் மாவட்ட செயலரிடம் வினவிய போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

யாழில் அரச உத்தியோகஸ்தர்களுக்கான எரிவாயு விநியோகம்: மாவட்ட செயலர் வெளியிட்ட தகவல் (Photo) | Illegal Gas Supply Jaffna

எரிவாயு கொள்கலன்களின்  விலை குறைப்பு

எரிவாயு கொள்கலன்களின் விலை குறைக்கப்படும் என அரசாங்கம் அறிவித்ததமையால் , கொள்கலன்களை பெற்று மக்களுக்கு விநியோகிக்க நாம் விரும்பவில்லை. ஏனெனில் விலை குறைக்கப்படும் என தெரியாது.

பெரியளவில் விலை வீழ்ச்சி ஏற்பட்டால் , அதில் ஏற்படும் நட்டத்தினை யார் மீது சுமத்துவது என்ற பிரச்சினை இருந்தது. அந்நிலையில் திணைக்களங்களின் நலன்புரி சங்கங்கள் ஊடாக திணைக்கள பணியாளர்கள் தமக்கான எரிவாயுவினை பெற்றுக்கொள்ள கோரிக்கைகளை முன்வைத்தது.

அதன் அடிப்படையில் அவர்களுக்கான கொள்கலன்கள் இன்றைய தினம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இருந்த போதிலும் மாவட்ட செயலகத்தில் விநியோகிக்க நான் அனுமதிக்கவில்லை. ஏனைய திணைக்களங்கள் தொடர்பில் அந்த அந்த திணைக்கள தலைவர்களிடமே வினாவ வேண்டும்.

யாழில் அரச உத்தியோகஸ்தர்களுக்கான எரிவாயு விநியோகம்: மாவட்ட செயலர் வெளியிட்ட தகவல் (Photo) | Illegal Gas Supply Jaffna

அதேவேளை யாழ்ப்பாணத்திற்கு மாதாந்தம் 60 ஆயிரம் கொள்கலன்கள் தேவைப்படுகின்றன. அந்த வகையில் இதுவரை 40 ஆயிரம் கொள்கலன்கள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

மிகுதியும் மிக விரைவில் வழங்கப்படும் தினமும் யாழ்ப்பாணத்திற்கு 2 ஆயிரம் கொள்கலன்களை எடுத்து வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

எனவே எதிர்வரும் வாரத்தினுள், யாழில் கொள்கலன்கள் தாரளமாக பெற்றுக்கொள்ள கூடிய சூழல் ஏற்படும். அதன் பின்னர் நேரடியாக விநியோகஸ்தர்களே தமது வாடிக்கையாளர்களுக்கு கொள்கலன்களை விநியோகிப்பார்கள்”என தெரிவித்தார்.   

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரம்பொன் தெற்கு, Toronto, Canada

02 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, Lengerich, Germany

06 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பொகவந்தலாவை, திருகோணமலை, Brampton, Canada

05 Apr, 2025
மரண அறிவித்தல்

மண்டைதீவு, விசுவமடு

03 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அரியாலை, கொழும்பு

06 Mar, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Catford, United Kingdom

06 Apr, 2012
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, முரசுமோட்டை

01 Apr, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

05 Apr, 2015
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Tellipallai, பிரான்ஸ், France

05 Apr, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

05 Apr, 2025
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி தெற்கு, Cazis, Switzerland, இருபாலை

31 Mar, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US