இலங்கைக்கு சுற்றுலா விசாவில் வரும் வெளிநாட்டவர்களால் ஏற்பட்டுள்ள ஆபத்து
இலங்கை சுற்றுலா வளர்ச்சிக்காக, 40க்கும் மேற்பட்ட நாடுகளின் சுற்றுலாப் பயணிகளுக்கு இலவச விசா வசதி நீட்டிக்கப்பட்டுள்ளது.
5 பில்லியன் அமெரிக்க டொலர்களாக அந்நிய செலாவணியை அதிகரிக்கத் திட்டமிட்டுள்ள அரசாங்கம், ஆண்டுக்கு 3 மில்லியன் சுற்றுலாப் பயணிகளை இலக்காகக் கொண்டுள்ளது.
ஆனால், சுற்றுலா துறையின் வளர்ச்சி அவசியமான கட்டுப்பாடுகள் இல்லாமை மற்றும் சட்ட விளக்கங்கள் குறைவாக உள்ளமையால் சிக்கல்களை எதிர்கொள்கிறது.
சுற்றுலா வழிகாட்டி
விருந்தினர் நிர்வாகம், டெக்சி சேவைகள், மற்றும் சொந்த மொழியில் சுற்றுலா வழிகாட்டி சேவைகள் போன்றவற்றில் சுற்றுலாப் பயணிகள் நேரடியாக ஈடுபடுகிறார்கள்.
கிழக்கு மாகாணத்தின் அருகம்பே பகுதியில், இஸ்ரேலியர்கள் நடத்தும் வணிக மையங்கள் அதிகளவில் இயங்குகின்றன. இவை சர்பிங் விரும்பிகளுக்கான இடமாக இருக்கிறது.
இஸ்ரேலியர்கள் நடத்தும் இந்த நிறுவனங்களில், ஹீப்ரூ மொழியில் அறிவிப்புப் பலகைகள் காணப்படுகின்றன. மேலும் யூத சமூக மையமாக சபாத் ஹவுஸ் எனும் இடமும் அப்பகுதியில் இயங்குகிறது.
சமீபத்தில், இஸ்ரேலிய சுற்றுலாப் பயணிகள் சட்டவிரோத வணிக நடவடிக்கைகளில் ஈடுபடுவதை விமர்சிக்கும் ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலானது.
இதற்கான நடவடிக்கைகள் குறித்து கேட்டபோது, சுற்றுலா அமைச்சின் அதிகாரி ஒருவர், “விசா அனுமதிகள் மற்றும் கண்காணிப்புகள் குடிவரவு துறையின் பொறுப்பாகும். சுற்றுலா அமைச்சகம் சட்ட அமலாக்கத்தில் நேரடியாக ஈடுபட முடியாது” என பதிலளித்துள்ளார்.
சுற்றுலாப் பயணிகள்
மேலும், வெளிநாட்டினர் ஸ்பாக்களில் வேலை செய்வதும், இந்தியாவில் இருந்து வரும் சுற்றுலாப் பயணிகள் விவசாயம் மற்றும் கட்டுமானத் துறைகளில் வேலை செய்வதும் கடந்த காலங்களில் கண்டறியப்பட்டுள்ளது.
சுற்றுலா விசாவில் இலங்கை வரும் இஸ்ரேல், இந்தியா மற்றும் ரஷ்யா உள்ளிட்ட நாடுகளின் சுற்றுலாப் பயணிகள், சட்டத்திற்குப் புறம்பாக வேலை மற்றும் வணிக நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர்.
இந்தவகைச் சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடும் வெளிநாட்டினர், பொலிஸார் அல்லது குடிவரவு அதிகாரிகளால் சோதிக்கப்படும்போது, சட்டப்பூர்வ உரிமையாளர்களாக தங்களை காட்டும் ஆவணங்கள் தயாரித்து வைத்திருப்பதுடன், அதிகாரிகளைத் தெளிவாகக் குழப்பும் விதமாக செயற்படுகிறார்கள்.இது சட்ட அமலாக்க அதிகாரிகளை குழப்புகிறது, என அந்த அதிகாரி வருத்தத்துடன் தெரிவித்துள்ளார்.
நல்லூர் கந்தசுவாமி கோவில் 6ஆம் நாள் மாலை திருவிழா



